வேதாகமம் ஆண்டவரின் வார்த்தையா?

வேதாகமம் ஆண்டவரின் வார்த்தையா?

1. அறிமுகம

வேதாகமம் 66 புத்தகங்களைக் கொண்டுள்ளது. அவற்றை நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.

அதற்கு இரண்டு தலைமையான பிரிவுகள் உண்டு:

  • பழைய ஏற்பாடு ஆண்டவருக்கும் மனிதனுக்கும் இடையிலான பழைய உடன்படிக்கையாகும். அது 39 புத்தகங்களைக் கொண்டுள்ளது.
  • புதிய ஏற்பாடு ஆண்டவருக்கும் மனிதனுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கையாகும். அது 27 புத்தகங்களைக் கொண்டுள்ளது.
  • வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு பகுதியானது புதிய ஏற்பாட்டு பகுதியின்றி நிறைவுபெறாததாய் விளங்கும். ஏனெனில் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமம் மோசே என்பவரால் கி.மு. 1500-ல் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் யோவான் என்பவரால் கி.பி. 100-ல் எழுதப்பட்டது.

  • எனவே, முழு வேதாகமத்தைத் தொடக்கத்திலிருந்து முடிவுவரை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் சுமார் 1600 ஆண்டுகளாகும். (எதிரே உள்ள வரைப்படத்தைப் பார்க்கவும்)

    வேதாகமம் ஆண்டவர் எப்படி உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தார் என்பதைச் சொல்லி தொடங்குகிறது.

  • படைப்பைப் பற்றிய தலைசிறந்த அறிவைக் கொண்ட ஒருவரின் உதவியின்றி படைப்பைப் பற்றி மோசே இவ்வளவு விரிவாக எழுதுவது என்பது சாத்தியமானதல்ல. ஏனென்றால் ஆண்டவர் உலகத்தைப் படைத்த காலத்தில் அவர் வாழவில்லை.

    எனவே, அப்படி அந்த விவரங்கள் உண்மையானவையானால், அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏவுதலினாலேயே வந்திருக்கமுடியும்.

    வேதாகமம் வெளிப்படுத்தல் புத்தகத்தைக் கொண்டு முடிவு பெறுகிறது. ஆண்டவர் எப்படி உலகத்தை நியாயந்தீர்ப்பார், பாவத்தை அழிப்பார், அவரது நித்தியமான நீதியின் ராஜ்யத்தை அமைப்பார் என்பதை இந்தப் புத்தகம் நமக்குக் கூறுகிறது.

    progressionகடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிவைக்கொண்ட ஒருவரின் உதவியின்றி எதிர்காலத்தின் சம்பவங்களைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதுவது என்பது யோவானுக்குச் சாத்தியமானதல்ல
    எபிரெயர் 1:1-2, கூறுகிறது, "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும்
    உண்டாக்கினார்."

    (ஆண்டவரின் திட்டத்தின் படிப்படியான வளர்ச்சி பெறும் வெளிப்படுத்தல்)

    அது தனிச்சிறப்பு வாய்ந்த புத்தகம். எனவே, வேதாகமம் ஒரு சாதாரணமான புத்தகமல்ல. அதில் முரண்பாடுகள் இல்லை.

வேதாகமம் ஆண்டவரின் ஏவப்பட்ட வார்த்தை என்பதை உறுதியாக அறிந்துகொள்வது எப்படி?

இதை தெளிவுபடுத்துவதற்கு ஒரு விளக்கத்தைப் பகிர்ந்துகொள்ள எனக்கு இடங்கொடுங்கள்.

ஓரு நிறுவனத்தின் நிர்வாகி 10 ஆண்டுக் காலக்கட்டத்தில், 40 செயலாளர்கள் எழுத 66 கடிதங்களைப் படித்ததாக வைத்துக்கொள்வோம். நாம் 66 கடிதங்களையும் ஒரே கோப்புக்குள் வைக்கமுடியும் ஏனென்றால் அந்த கடிதங்கள் அனைத்தையும் எழுதியவர் அதைச் சொன்ன நிர்வாகியே ஒழிய அவற்றை எழுதிய செயலாளர்கள; அல்ல.

அதுபோலவே, 1600 ஆண்டுக் காலக்கட்டத்தில் 40 எழுத்தாளர்கள் எழுதிய 66 புத்தகங்களை வேதாகமம் கொண்டுள்ளது. அந்த 66 புத்தகங்களை எழுதியவர் ஒருவரே என்பதே இதன் பொருளாகும். தொடக்கதில் இருந்து முடிவுவரை முழு வேதாகமத்தை எழுதுவதற்கு 1600 ஆண்டுகள் ஆனதால், 1600 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஆண்டவர் ஒருவராகவே இருக்கமுடியும்.
எனவே, ஆண்டவரே வேதாகமத் தின் எழுத்தாளர் என்று நம்மால் முடிவு செய்யமுடிகிறது.

மூலம்;http://www.sccc.org.sg/discovery/4/tamil