இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

வேதாகமும், சம்பவங்களும் 1

சகோதரி லதாடேவிட் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் படி அவர்களின் அனுமதியுடன் இங்கு வெளியிடுகிறேன்.அதில் 60 பாயிட்ஸ் உண்டு நம் தளத்தில் முழுவதும் ஒரே பதிப்பாக பதிக்க முடியாது.அதை பிரித்து பத்து பத்தாக பதிக்கிறேன்.அந்த புத்தகம் என்னிடம் pdf பைல்லாக உள்ளது அதை நம்தளத்தில் பதிய சிறிது கால தாமதமாகும்.

வேதாகமும், சம்பவங்களும்


இத்தொகுப்பு - ஓர் அறிமுகம்
ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின்
வாழ்த்துக்கள்!
இச்சிறிய கைப்புத்தகம் வெளியிட உதவி செய்த இயேசு பெருமானுக்கு
உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறோம்.
இச்சிறிய கைப்புத்தகத்தில், நாங்கள் படித்து சிந்தித்து விளங்கிக்
கொண்ட வசன அடிப்படையிலான தற்கால நிகழ்வுகளை, நீங்களும் படித்து
சிந்தித்து விளங்கிக் கொள்ள எண்ணி வெளியிட்டுள்ளோம். இது எங்கள்
வெளீயீட்டின் முதல் பாகம். இரண்டாம் பாகம் விரைவில் வெளிவருமென
கர்த்தருக்குள் நம்புகிறோம். ஜெபிக்கிறோம். உங்கள் ஜெபங்களில் எங்களை
நினைத்துக் கொள்ளுங்கள்.
தாங்கள் பயன் பெற்று குறைந்தது பத்து பேருக்காவது வாசிக்க
மின் அஞ்சல் செய்யுங்கள். உங்களது மேலான கருத்துச் சிந்தனைகளை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சகோதரி. லதா டேவிட் / சகோ. இ. டேவிட் .எங்கள் முகவரி:
சகோதரி. லதா டேவிட்
நித்தியர் இயேசு ஊழியங்கள்
71, போல்டன்புரம் 3-ம் தெரு,
தூத்துக்குடி-628 003
தொலைபேசி: 91-461-2323633 அலைபேசி: 0-94424-66250
Email: sovereign_ jesus@sancharnet.in


Our Address:
Sis. L ATHA D AVID
SO VEREIGN JESUS MINISTRIES
71, BOULDEN PURAM THIRD STREET,
TUTICORIN-628 003
Ph.: 91-461-2323633 / Mobile: 0-94424-66250
Email: sovereign_ jesus@sancharnet.in
12345678901
12345678901
1) தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்திலே சொல்ஹ்ல்க்
கொள்கிறான். - சங்கீதம் 14:1தேவன் இல்லையென்கிறது விஞ்ஞான உலகம். கடவுள் இல்லை, இல்லவே இல்லை
என்ற வார்த்தைகள் எங்கும் தொனிக்கின்றன. தேவன் இல்லை என்பதை நிரூபிக்க
அரசியல் விஞ்ஞானத் துறைகளில் பல பெரிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
உண்மையிலேயே கடவுள் இல்லையென்றால் அவர் இல்லை என்பதை நிரூபிக்க
இத்தனை ஹிமாலய முயற்சிகள் தேவையில்லை. இல்லாத ஒன்றை இல்லை என்று
நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க எடுக்கப்படும்
முயற்சிகளே கடவுள் உண்டு என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.

"Laws of Cause and Effect" என்ற விஞ்ஞான விதி என்ன கூறுகிறதென்றால், எல்லா
விளைவுகளுக்கும் அவ்விளைவுகளுக்குப் பின்னால் அதற்கான காரணம் ஒன்று உண்டு
என்பதாகும்.

உலகில் பல விதமான கடிகாரங்கள் (Quartz, Electronic) வந்துள்ளன.
விஞ்ஞானிகள் வானவியல் கடிகாரத்தை உபயோகிக்கின்றனர். இந்த கடிகாரம் பூமி
சுழல்வதைப் பொறுத்து செயல்படும். இந்த கடிகாரங்கள் எல்லாம் மனிதரால்
உருவாக்கப்பட்டவை. எந்த கடிகாரமும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளாது.
உலக கடிகாரங்களை எல்லாம் நிர்வாகிக்கின்ற பூமி என்ற பெரிய கடிகாரத்தை உருவாக்க
நிச்சயமாக ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும். As the earth is an effect there should
have seen a .cause. that made it..


.


Effect cannot be greater than the cause
மனிதன் கம்ப்யூட்டர்களையும்
ராக்கெட்டுகளையும் கண்டுபிடித்தாலும் தன்னை விட பெரிதான எதையும் அவன்
கண்டுபிடிக்கவில்லை. படைப்புகளில் உயர்ந்தவன் மனிதன். மனிதனுக்கு எப்படி உயிரும்
ஆள்தத்துவமும், உணர்ச்சிகளும் உள்ளதோ அது போலவே அவனை உருவாக்கிய சக்தியும்
மனிதனை விட உயர்ந்ததாக, உயிர் உணர்ச்சி ஆள்தத்துவம் உள்ளதாக இருந்திருக்க
வேண்டும். அந்த சக்தியே எல்லாவற்றிற்கும் மூல காரணர். He is the principal cause
for all the effect.24 மணி நேரத்திற்கு ஒரு முறை தன்னை சுற்றும் உலகம், இரவு பகல்,
பருவகாலங்கள், குறிப்பிட்ட பாதையில் ஓடும் கிரகங்கள் எல்லாம் ஒரு திட்டத்தைக்
காட்டுகின்றன. திட்டம் ஒன்று உண்டென்றால் அதை திட்டமிடுபவரும் நிச்சயம் இருக்க
வேண்டும். If there is a design there has to be a designer..
மர தச்சன் இல்லாமல்
நாற்காலி உருவாவதில்லை.

எந்த பொருளும் கீழே பூமியை நோக்கித்தான் விழுகின்றன. வானை நோக்கி
செல்வதில்லை. இது இயற்கையில் நாம் காணும் சட்டம். சட்டம் இருக்கிறதென்றால்
சட்டத்தை உருவாக்கியவரும் இருக்கத்தான் வேண்டும். If there is a law there has to
be a Law giver.


.

தேவன் இல்லையென்று சொல்பவன் நாஸ்திகன். இவன் எப்போதும் தெய்வத்தைப்
பற்றியே நினைக்கிறான். இல்லாத ஒன்றை பற்றி ஏன் எப்போதும் நினைக்க வேண்டும்?
இதுவும் தேவன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாகும்.

தொடக்கம் இல்லாமல் எதுவும் உருவாக முடியாது. பல மில்லியன் வருடங்களுக்கு
முன் சுழன்றுக் கொண்டிருந்த வாயுக் கோளத்தில் இருந்து தான் எல்லா கிரகங்களும்
வந்தது என்று வைத்துக் கொண்டாலும் (விஞ்ஞானம் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறது);
அந்த வாயுக்கோளம் எப்படி, எங்கிருந்து வந்தது? தொடக்கம் இல்லாமல் எவ்விதம் உருவாக
முடியும்? மனிதன் சிந்திக்கிறான். சிந்தனையின் முடிவில் அறிவுப்பூர்வமான அதிர்ச்சி
அடைகிறான். தேவன் உலகத்தை உருவாக்கினார் என்பதை சோதனைச் சாலையில்
நிரூபிக்க முடியாது என்பதால் குழப்பத்தின் எல்லைக்கு சென்று Darwin Theory
போன்ற
கொள்கைகளை ஏற்படுத்துகிறான். கடவுளை நம்புபவன் முட்டாள் என்று விஞ்ஞான உலகம்
சென்று கொண்டிருப்பதால்; தேவன் இந்த உலகை சிருஷ்டித்தார் என்ற உண்மையை
மனிதனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த குழப்பமெல்லாம்.

2. a) தேவனாகிய கர்த்தர் மனு'னை பூமியின் மண்ணினாலே உருவாக்கி,
ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனு'ன் ஜீவாத்துமாவானான்.
- ஆதியாகமம் 2:7உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஒரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர்.
(பிரௌன்) (Brown)


இன்றைக்கும் மனிதனுடைய சரீரத்தில் உள்ள மூலகங்களான நைட்ரஜன், கார்பன்,
ஆக்சிஜன், கால்சியம், தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான
உலகமும் உறுதிப்படுத்துகிறது. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள்
கட்டுக்கதைகள் அல்ல. தேவன் மண்ணினால் மனிதனை உருவாக்கினார் என்பதே
உண்மை.

b) பூமியானது மிருகங்களையும்... ஊரும் பிராணிகளையும்... பிறப்பிக்கக்கடவது
என்றார். (ஆதி. 1:24)பூமியின் மண்ணிலுள்ள அதே மூலகங்கள்தான் மிருகங்களின், ஊர்வனவற்றின்
சரீரத்தில் இருப்பதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

3. காற்று தெற்கே போய் வடக்கேயும் சுற்றி சுழன்று அடித்து தான் சுற்றின
இடத்துக்கே திரும்பவும் வரும். பிரசங்கி 1:6பருவக் காற்றுகள்தான் மழையைக் கொண்டு வருகின்றன. வேதம் சொல்லும்
இம்முறையையே உலகப் பருவக் காற்றுகள் இன்றும் பின்பற்றுகின்றன.

4. வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததுபோல ... என் தாசனாகிய
தாவீதின் சந்ததியையும் வர்த்திக்கப் பண்ணுவேன் என்று... எரேமியா 33:221930 ஆண்டுவரை சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக
விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் பிறகு 10 S extillion நட்சத்திரங்கள் இருப்பதாக
கணக்கிட்டனர் (40 Sextillion என்றால் 40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.)
பிறகு முடிவில் நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று விஞ்ஞானிகள் அறிவித்து
விட்டனர். இது வேத வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபிக்கிறது.

5. தேவன் தம்முடைய சாயலாக மனு'னை சிருஷ்டித்தார். -ஆதி. 1:27"Second Law of Thermodynamics"
என்பது ஒரு விஞ்ஞான விதி. இந்த
விதிப்படி ஒரு குறிப்பிட்ட அளவுள்ள சக்தி மற்றொரு சக்தியாக மாற்றப்படும்போது பயனுள்ள
மொத்த சக்தியில் ஒரு பகுதி வீணாய் செலவழிந்து போகும்.
இன்னும் விளக்கமாகச் சொன்னால் உலகில் இந்த சக்தி மாற்றம் தொடர்ந்து
நடைபெறுவதால் உலகம் மேலான நிலையில் இருந்து கீழான நிலைக்கு சென்று
கொண்டிருக்கிறது. (பூமியின் சுழற்சி வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருவது விஞ்ஞான
உண்மை).
ஆனால் டார்வினுடைய கொள்கைப்படி சிறிய உயிரினங்களில் இருந்து படிப்படியாக
மேலான உயிரினங்கள் வந்தன என்கிறது. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று
கூறுகிறது. இது மேற்கூறிய விஞ்ஞான உண்மைக்கு எதிர்மாறாக உள்ளது.
டார்வின் இப்படிக் கூறி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் மனிதனையும் குரங்கையும்
இணைத்து இணைப்பு உயிரினம் எதையும் மனிதன் கண்டு பிடிக்கவில்லை. Missing
link is still missing

குரங்குக்கு இருக்கும் அகன்ற தாடையும், விரிந்த மூக்கும், குட்டை
கழுத்தும், கால்களுக்கு கீழ் வரை தொங்கும் நீண்ட கைகளும், வாலும் மனிதனுக்கு
சம்பந்தமில்லைதவை. வேதத்தின் செய்தியான, தேவன் மனிதனை நேரிடையாக
உருவாக்கினார் என்பதே சரி.

6. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதி. 1:1


தேவன் பூமி, சந்திரன், சூரியன் நட்சத்திரங்களை உருவாக்கி சுமார் 10,000
வருடங்கள்தான் ஆகியுள்ளது என்பது கிறிஸ்தவ வேதாகமத்தின் அடிப்படை உண்மை.
ஆனால் விஞ்ஞானம் இவைகள் உருவாகி பல மில்லியன் வருடங்கள் ஆகியிருப்பதாக
நம்புகிறது.

அ) 30 Tons / Sec.
என்ற வேகத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஹாலி நட்சத்திரத்தின்
வால் அது உருவாகி பல மில்ஹ்ல்யன் வருடங்கள் ஆகியிருந்தால் எரிந்து முடிந்திருக்கும்.

ஆ) ஒரு வருடத்திற்கு சுமார் 14.2 மில்லியன் டன் எடையுள்ள விண்துகள்கள் பூமியில்
விழுந்து, மழையால் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு அங்கு நிக்கலாக மாறுகிறது. உலகம்
உருவாகி சுமார் 5000 மில்லியன் வருடம் ஆகியிருக்கும் என்று வைத்துக் கொண்டாலும்
சுமார் 54 அடி உயரத்துக்கு விண்துகள்களின் சாம்பல் இருக்க வேண்டும். கடலில் உள்ள
நிக்கலின் அளவை கணக்கிட்டால் சுமார் 8000 ஆண்டுகளாகத்தான் இத்துகள்கள் பூமியில்
விழுகிறது என்பது தெரிகிறது. சந்திரனில் அரை அங்குலம் உயரம் மட்டுமே இத்துகள்கள்
உள்ளதாக சந்திரனில் இறங்கிய விஞ்ஞானிகள் செய்தி அனுப்பினார்கள்.

இ) ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் வீதம் அவர்கள் ஆயுசு காலம் 43 வருடம்
என்று வைத்துக் கணக்கிட்டால் இன்றைய உலகின் ஜனத்தொகையான 6,080,141,683
(Source: World Population data from Encyclopedia on 1-6-2000)
மக்கள் வர
4000 வருடங்கள் ஆகும். தற்போதைய மக்கள் தொகை 6.5 பில்லியன் (Source: World
Population data from Encyclopedia on Dec. 2006)

டார்வின் கொள்கைப்படி மனித
இனம் உருவாகி 1 மில்லியன் வருடம் என்று வைத்துக் கொண்டாலும் இன்றைய
ஜனத்தொகை Approx. 10 2700 ஆக இருக்கும். அதாவது 10க்கு பக்கத்தில் 2700 பூஜ்ஜியங்கள்
போட வேண்டும்! அவ்வளவு மக்களுக்கு பூமியில் இடமில்லை.

ஈ) இவைகளெல்லாம் (பூமி, சந்திரன்) பல மில்லியன் வருடங்கள் ஆகியுள்ளது என்பதை
நிரூபிக்க தேவையான சரியான விஞ்ஞான உபகரணங்களும் இல்லை.

வேதமே சரி!!


7. தேவனாகிய கர்த்தர் தாம் மனு'னில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக
உருவாக்கி...
- ஆதி 2:22தேவன் முதல் மனுஷியை மனிதனில் இருந்து உருவாக்குகிறார். மனிதனையும்
அவரே தான் உருவாக்குகிறார்.

ஆனால் விஞ்ஞான உலகம் சில ரசாயனப் பொருட்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பாக தற்செயலாக ஒன்று சேர்ந்ததினால் உலகமும், உயிரினமும் உருவாகியிருக்கும்.
அப்படியே மனிதனும், மனுஷியும் உருவானார்கள் என்று நம்புகிறது. இவர்கள் தேவன்
இல்லையென்கிற நாத்திக கொள்கையையுடையவர்கள்.

உயிரின் அடிப்படையான புரோட்டீன் மூலக்கூறு தற்செயலாக உருவாக மட்டும்
சுமார் 10 234 மில்லியன் வருடங்கள் (10க்கு பிறகு 234 ஜீரோ போடுக) ஆகியிருக்கும் என்று
Du-Novy என்ற விஞ்ஞானி தெரிவிக்கிறார். ஆனால் உலகம் உருவாகியோ சுமார் 6000
முதல் 10,000 வருடங்கள்தான் ஆகிறது. எனவே தற்செயலாக உலகமும் உயிரினங்களும்
உருவாகியிருக்க முடியாது.

8. தேவன் பகலை ஆள, பெரிய சுடரும் (சூரியன்) இரவை ஆள, சிறிய
சுடரும் (சந்திரன்) ஆகிய... நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்...
-ஆதியாகமம் 1: 16,17


நாம் வசிக்கும் பூமியும் மற்றக் கிரகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருந்த
ஒரு வாயுக் கோளத்தில் இருந்துதான் பிரிந்து வந்தன என்று விஞ்ஞான உலகம் நம்பி
இருந்தது. இது "Nebular Theory"
ஆகும் . (அந்த வாயுக் கோளம் எங்கிருந்து வந்தது?)
சுழலும் வாயுக் கோளத்தில் இருந்து பூமியும், கிரகங்களும் வந்திருக்குமானால் அந்த
வாயுக் கோளம் சுழன்ற திசையில்தான் எல்லா கிரகங்களும் சுற்ற வேண்டும். மேலும்
எல்லா கிரகங்களும் ஒரே திசையில்தான் சுற்ற வேண்டும். இதை கணிதத்துறை வல்லுனர்
"Law of Conservation of angular momentum"
என்று அழைக்கின்றனர்.

ஆனால்...

அ) மெர்க்குரி என்ற கிரகமும், வீனஸ் என்ற கிரகமும் பூமியைப் போல தங்களைத்
தங்களே சுற்றிக் கொள்வதில்லை.

ஆ) வீனஸ் கிரகம் மட்டும் மற்ற கிரகங்களுக்கு எதிர் பக்கத்தில் சுற்றுகிறது.

இ) யுரேனஸ் என்ற கிரகம் 98 டிகிரி சாய்வில் சுற்றுகிறது.

ஈ) பூமி 231/2 டிகிரி சாய்வில் சுற்றுகிறது.

உ) இந்த அமைப்பில் உள்ள 32சந்திரன்களில் 11 சந்திரன்கள் எதிர்புறமாக
சுற்றுகின்றன.

ஊ) எல்லா கிரகங்களும் வெவ்வேறு தன்மை பொருந்தியவை. பூமி மிகச்
சிறப்பானது. இதில் 100க்கு மேற்பட்ட மூலகங்கள் உண்டு.

எ) ஒவ்வொரு கிரகமும் தன்னைத் தானே சுற்ற எடுத்துக் கொள்ளும் கால
அவகாசங்களும் வெவ்வேறு. உ.ம். வியாழன் கிரகம் பூமியை விட 11
மடங்கு பெரியதாக இருந்தாலும் இது 10 மணிக்கொருமுறை தன்னைத் தானே
சுற்றி விடுகிறது.

Nebular Theory
தவறு என்றும், வேதத்தின்படி தேவனே அனைத்தையும்
உருவாக்கினார் என்பதும் நிரூபணமாகிவிட்டது.

9) தாம் பூமியிலே மனு'னை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்.
அது அவர் மனதுக்கு... -ஆதி. 6:6


இந்த வசனமும் தேவன்தான் மனிதனை உருவாக்கினார் என்பதற்கான மற்றொரு
சான்று.

அ) உயிரின் அடிப்படை மூலக்கூறு DNA
(அமினோ ஆசீட்)-ஐ தேவையான விகிதத்தில்
சோதனைக் குழாயில் இட்டு உயிர்தன்மையுள்ள பொருளை விஞ்ஞானிகள் கண்டு
பிடித்துள்ளனர். DNA
(விற்கான விகிதத்தை அவர்கள் இன்னொரு மூலக்கூறு DNA
(-ல்
இருந்து தெரிந்து கொண்டனர். அந்த இன்னொரு DNA
(-க்கு சூத்திரத்தை வகுத்தவர் யார்?
விஞ்ஞானம் பதில் சொல்ல முடியவில்லை. சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட
DNA
(-க்கு எப்படி அதைவிட பெரிய விஞ்ஞானி தேவைப் படுகிறாரோ, அதுபோலவே உலகின்
உயிரினங்களை உருவாக்க அவை எல்லாவற்றையும் விட பெரிய விஞ்ஞானியான ஆண்டவர்
தேவை. அவர் இருக்கிறார் என்பதை இக்கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.

ஆ) குரங்கு மனிதனாக மாற பல லட்சக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கும்
என்பதால் அதை கண்களால் காண முடியாது என்கிறார் விஞ்ஞானி டார்வின். விஞ்ஞானம்
என்றால் அது கண்களால் காணக்கூடியதும், சோதனைச் சாலையில் நிரூபிக்கக்கூடியதாவும்
இருக்க வேண்டும். அதனால் இக்கருத்து ஒரு கொள்கைதானேயன்றி விஞ்ஞான
உண்மையல்ல.

இ) Dianosaurus
போன்ற ராட்சத மிருகங்கள்தான் மனிதனின் முன்னோடி என்பது
இவர் கருத்து. இல்லினாய்ஸ், கெண்டகி, மிசௌரி, டெக்ஸாஸ் ஆகிய இடங்களில் இந்த
மிருகத்தின் காலடிச் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனுடன் மனிதனின் காலடிச்
சுவடுகளும் காணப்பட்டன. ராட்சத மிருகங்களும், மனிதனும் ஒரே சமயத்தில் தேவனால்
உருவாக்கப்பட்டு பூமியில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.

10. வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மனுபுத்திரனுக்குக் கொடுத்தார்.
-சங். 115:16அ) பூமியில் இருந்து 1/4 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் சந்திரனில்
துளிகூட தண்ணீர் இல்லாததால் அது மனித குடியிருப்புக்கு லாயக்கு இல்லாத இடம் என்று
அப்பெல்லோ 17 முயற்சிகள் நிறுத்தப்பட்டன.

ஆ) மார்ஸ் கிரகத்தில் 30 டிகிரி சென்டிகிரேட் குளிர்ந்த நிலையில் மனிதன் குடியேறுவது
சாத்தியமற்றது என்று அந்த கிரகத்துக்கு சென்று வந்த விண்வெளி கலங்கள் தெரிவிக்கின்றன.

இ) வீனஸ் கிரகத்தின் உஷ்ண நிலை 900 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். முதஹ்ல்ல்
அனுப்பப்பட்ட கலங்கள் உஷ்ணத்தால் எரிந்து விட்டன. கந்தகம் நிறைந்த அங்கு மனிதன்
எப்படி குடியேறுவது?

ஈ) சந்திரனிலும் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு
அவர்களுக்கான சில தகவல்களை வான்வெளி கலங்கள் எடுத்துச் சென்றன. ஆனால்
இதுவரை அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. செவ்வாய் கிரகவாசிகள், வேற்றுகிரக
மனிதன் போன்ற விசித்திர உருவங்கள் கதைகளிலும், பறக்கும் தட்டு போன்ற ஆதாரமில்லாத
செய்திகளும் தான் சாத்தியமாயிற்று.

பூமியைத் தவிர மற்றைய கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திரங்கள் எல்லாவற்றிலும்
தேவனைத் தவிர மற்றைய உயிரினங்கள் வாழ முடியாது. ஏனென்றால் அவைகள்
கர்த்தருடையவை. Readers Digest
என்ற உலகப்புகழ் வாய்ந்த பத்திரிக்கை என்ன
கூறுகிறதென்றால், உலக வல்லரசு நாடுகள், வானவெளி ஆராய்ச்சியில் தோல்வியடைந்து
விட்டன. தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாததால் பெயரளவில் சில Shuttle மாத்திரம்
செய்திக்காக அனுப்புகின்றன. வான வெளி கலங்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டன.

இந்த 2006வது வருடத்திலும் செவ்வாய் கிரகத்துக்கு வரும் ஆண்டில் சக்தி வாய்ந்த
இயந்திரத்தை அனுப்பப் போவதாக பேசிக் கொண்டுதான் இருக்கிறது. வேறு எதுவும்
செய்ய முடியவில்லை.

தொடரும்


by;மைகோவை
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=346