உலகின் ஒளி

 
 
 
 

Psalms 99:5  "Exalt ye the LORD our God, and worship at his footstool; for he is holy. 


நாம் ஏன் கடவுளைத்தேடுகிறோம் ?

எமக்கு தேவையானவைகளைபெற்றுக்கொள்வதற்காகவா?

நமக்கும் ஒரு கடவுள் தேவை என்பதற்காகவா?

மனிதர்கள் எல்லோரும் பாவிகள்,பாவத்தில் வாழும் மாந்தர்கள் எல்லோரும் எப்படி பரிசுத்தமான கடவுளை தேடமுடியும்?

அப்படியே தேடினாலும் எமக்கு பதில் கொடுக்கக்கூடிய கடவுள் யார்?

அவர் எப்படி நமக்கு பதில் கொடுக்கிறார்? என்பதை சிந்தித்துப்பார்க்கின்றனரா?

அப்படி எல்லோரும் சிந்திப்பவர்களாகயிருந்தால் எல்லாக் கடவுளும் ஒன்று எந்த மதமும் ஒன்றுதான் என்று கூறுகின்றனர் ஒன்று என்று சொல்வதில் அர்த்தம் இல்லாமலில்லை.

ஒன்று என்பது ஒன்றுதான்.ஆனால் எல்லாக்கடவுள், எல்லாமதம் இதுதான் இன்று குழப்பமாக உள்ளது.

நமக்கு தெரிந்தவரையில் எத்தனை கடவுள் உண்டு? யாரிடம் கேட்டாலும் ஒரு தெய்வம் உண்டு என்று ஒத்துகொள்கின்றனர்.

சரி ஒரேதெய்வம் ஒரேசக்தி (வல்லமை) உண்டு என்றால் ஏன்அதை எவராலும் கண்டுகொள்ளமுடியாமலிருக்கிறது?

அல்லது அந்த ஒரே தெய்வம் மனிதன் தன்னைத்தேடி கண்டு பிடிக்கக்கூடாது என்று ஒளித்துக் கொண்டுவிட்டதா?

இல்லவேயில்லை, எல்லோரும் ஒத்துக்கொள்கிறபடியே அந்த ஒரே தெய்வமானது மனிதன் தன்னைக் கண்டு கொள்ளவேண்டும் என்று தன்னை இந்த உலகத்தில் வெளிப்படித்தியது, ஆனால் மனிதனோ அந்த தெய்வத்தை தள்ளிவிட்டு தான் ஒளிந்து கொண்டான்.

எதற்குள் ஒளிந்து கொண்டான் என்றால், தனக்கு மனதில் தோன்றும் விதமாக தெய்வத்தைக் காணவிரும்புகிறான் அதற்கு ஏற்றவிதமாக அவனதுமனதில்வரும் கற்பனையைத்தான் தெய்வமாக சுருபமாக்குகிறான் அதை செய்து அதற்கு தன் மனதைக்கொடுத்து அதற்குள் ஒளிந்துகொள்கிறான்.

அடுத்ததாக இன்று உலகத்திலே பொய்யான அற்புதங்கள்;, அதிசயங்கள் அளவில்லாமல் நடக்கின்றது, இதுவும் மனிதனுக்கு மனதுக்கு பிடித்தமானதாகயிருப்பதால் இதைச் செய்பவர்களையும் தெய்வமாக்கி அதற்குள்ளும் ஒளிந்துகொள்கிறான்.

இவ்வளவு எல்லாவற்றையும் மனிதன் தான் நினைத்தவிதமாக அவனுடைய கடவுளுக்கு செய்தாலும் அந்தக்கடவுள்மார்கள் மனிதனுக்கு என்ன செய்கின்றனர்? பாவத்தில்வாழும் மனிதனுக்கு பாவத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு ஏதாவது விமோசனம் பெற அந்த கடவுள்மார்கள் கருணை புரிகின்றனரா? தெய்வம் என்றால் இதற்கான அர்த்தம் எப்படிப்பட்டது ?


இதை அறியாமல் எல்லாம் தெய்வம் என்றால் அந்த தெய்வத்தின் தன்மை என்ன?


தெய்வம் என்றாலே பரிசுத்தர், சர்வவல்லவர், ஆதியும்அந்தமும்இல்லாதவர், வானத்தையும் பூமியையும் உண்டாக்கி அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவர்.

இப்படிப்பட்ட தெய்வம் எல்லாவற்றையும் தன்னுடைய வல்லமையால் உண்டாக்கிவிட்டு மனிதனிடம் தாம் ஒன்றை எதிர்பார்த்து தனக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டும் அதிலே நான் குடியிருக்கவேணும் என்று எண்ணுவாரோ?

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்க ளல்லவென்றும் அறியீர்களா? 1கொரி. 6:19

ஆமேன், கர்த்தராகிய இயேசுவே வாரும்.