இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை அல்லது புராணக்கதையில் வரும் ஒரு கற்பனை நபர் அல்ல. அவர் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்தார். கிறிஸ்துவுக்கு முன்இ கிறிஸ்துவுக்கு பின் (கி.மு.இகி.பி.) என்று கிறிஸ்துவின் காலத்தின் வழியாகத்தான் இவ்வுலக வரலாற்றைப் பிறித்திருக்கின்றோம் என்பதிலிருந்து அவர் உலகில் வாழ்ந்தார் என்பது தெளிவு.


இப்பொழுது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடுஇ ரோமப் பேரரசினால் ஆளப்பட்ட காலத்தில்இ அகுஸ்து இராயன்(Augustu Caesar)என்பவர் ரோமப்பேரரசனாக இருந்தபோது இயேசு கிறிஸ்து பிறந்தார். அவருடைய வரலாறு மத்தேயுஇ மாற்குஇ லூக்காஇ யோவான் என்பவர்கள் எழுதியுள்ள நற்செய்தி நூல்களாகவும்இ இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற நூலாகவும்இ இதை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமம் (பைபிள்) என்ற பெரிய நூலாகவும் கிடைக்கின்றது. வாங்கி வாசித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் தெய்வத்தின் பண்புகள் யாவும் ஒருங்கே அமைந்திருப்பதை நீங்கள் அவருடைய வரலாற்றினின்று கண்டு கொள்வீர்கள். (பைபிள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகட்கு முன் எழுதி முடிக்கப்பட்ட அறுபத்து ஆறு நூல்களின் தொகுப்பு ஆகும். அதன் பழைய காலப் பிரதிகள் இன்றும் உள்ளன. அது சரித்திர ஆதாரம் கொண்ட உண்மை நூலாகும்).


பரிசுத்தம் உள்ளவர்


இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையினின்று வேறுபட்டதாகும். அவர் பொய் ஏதும் சொல்லவில்லைஇ திருடவில்லைஇ தான் சொன்னதைத் தவறு என்று மாற்றிக்கொள்ளவுமில்லை. அவருடைய வாழ்க்கை முழுவதிலும் பரிசுத்தம் காணப்பட்டது. ஒருமுறை அவருடன் நெருங்கிப்பழகி அவருடன் வாழ்ந்து வந்த அவருடைய சீடர்களும்இ அவருக்கு எதிரிகளாக இருந்த பரிசேயர் போன்ற மக்களும்இ பொது மக்களும் இருந்த இடத்தில் யாவரையும் நோக்கிஇ "என்னிடம் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?" என்று கேட்டார். ஒருவராலும் அவர் மீது ஒரு குறையும் சொல்ல முடியவில்லை. அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவருக்கு மரண தண்டனை வழங்கிய ஆளுநராகிய பிலாத்துவும் அவர் குற்றமற்றவர் என்றுதான் கூறினார்கள். புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கி வாசித்துப் பார்த்தால் அவருடைய வாழ்க்கையின் பரிசுத்தத்தை நீங்கள் கண்டு கொள்ளலாம். இவ்விதமாகப் பரிசுத்தமாக வாழ்ந்து காட்டிய வேறு எவரும் இல்லை.


மிகுந்த ஆற்றலுள்ளவர்


இயற்கையின் மீதும் எல்லா நோய்களின் மீதும் பெரும் ஆற்றல் கொண்டவராக இயேசு கிறிஸ்து திகழ்ந்தார். தன்னுடைய சீடர்களோடும்இ தாயாருடனும் ஒரு திருமண விருந்தில் பங்கேற்றபோது அத்திருமணத்தில் மக்கள் அருந்தும் பானமாகிய திராட்சரசம் தீர்ந்துவிட்டது. அவ்வீட்டில் இருந்த கல்லினால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை நிரப்பச் சொல்லி அத்தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றி அவர்களின் சிக்கலைத் தீர்த்தார் இயேசு. இன்னொரு முறை தன் சீடருடன் அவர் கடலில் பயணம் செய்தபோது சூறாவளிக்காற்றினால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இயேசு காற்றையும் கடலையும் நோக்கிஇ "இரையாதேஇ அமைதியாயிரு"இ என்று கட்டளையிட்டார். உடனடியாக சூறாவளிக் காற்று நின்றது. கடலின் கொந்தளிப்பும் அடங்கிற்று. இயற்கையின் மீது அவரது ஆற்றலை இவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


அற்புத சுகமளிப்பவர்


தொழுநோயால் நிரம்பியிருந்த ஒருவன் (குஷ்டரோகி) இயேசுவின் முன்னால் மண்டியிட்டுஇ "ஆண்டவரேஇ உமக்கு விருப்பமானால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"இ என்று கூறினான். இயெசு மனமுருகி அவனைத் தொட்டு உடனடியாக சுகமளித்தார். அவரிடம் வந்த குருடர்கள் யாவருக்கும் பார்வையளித்தார்இ ஊமையும் செவிடுமானவர்கள் பேசவும் கேட்கவும் செய்தார்இ பக்கவாதத்தால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்தவர்களை எழும்பி நடமாடச் செய்தார்இ இரத்தப்போக்கை நிறுத்தி சுகமளித்தார்இ முடவர்களை நடக்கச் செய்தார் இவ்வாறு எல்லா நோய்களினின்றும் குணமாக்கினார். மரித்துப்போன சிலரையும் உயிருடன் எழுப்பினார். அவரைத் தொட்ட யாவரும் அவரால் தொடப்பட்ட யாவரும் குணமடைந்தார்கள். இவற்றைக் கண்டவர்கள் எழுதிவைத்துள்ளனர். (புதிய ஏற்பாட்டை வாங்கி வாசித்துப்பாருங்கள்)


இப்பொழுதும் சுகமளிக்கிறார்


இயேசுவின் சுகமளிக்கும் ஆற்றல் இன்றும் செயல்படுகிறது. அவருடைய ஊழியர் பலர் இயேசுவின் பெயரால் அநேகரைக் குணமாக்குவது உலகெங்கும் (தமிழகத்திலும்) நடைபெற்று வருகிறது. இயேசுக்கிறிஸ்து செய்யும் அற்புதங்கள் யாவும் மக்களுக்கு நன்மை தருபவையாக அமைந்திருப்பதை நாம் காணலாம். மக்களின் தொல்லைகளையும் நோய்களையும் பார்த்து மனம் இரங்கி உதவி செய்கிறவர் இயேசு.
(யார் அற்புதங்களைச் செய்தாலும் அதனால் என்ன நன்மை என்று ஆராய்ந்து பாருங்கள்).


கண்டால்தான் நம்புவேன்


"கடவுளை எனக்குக் காட்டு"இ கடவுளைக் கண்டால்தான் நம்புவேன்இஎன்று
சாதிக்கும் பலரை நாம் காண்கின்றோம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் காணாத பலவற்றை நம்புகிறோம் என்பது மாபெரும் உண்மையாகும் காணவில்லை ஆனால் உண்டு


காற்றை நாம் கண்டதில்லை. ஆயினும் காற்று உண்டு என்பதை நாம் யாவரும் நிச்சயமாக நம்புகிறோம். காற்று நம்மீது வீசுவதை உணருவதால் இது எளிதாகின்றது. எனவேஇ ஒரு பொருளைக் காணாத போதிலும் அதை உணருவதின் முலம் அது உண்டு என்பதை நாம் யாவரும் நம்புகிறோம்.


மின்சாரத்தை எவரும் பார்த்ததில்லை. ஆனால் அதன் விளைவுகளைக் காண்கிறோம். விளக்கு எரிவதுஇ மின் விசிறி சுற்றுதல்இ மின்சாரம் பாயும் கம்பியைத் தொட்டால் அதிர்ச்சியடைதல் ஜஷாக்ஸ போன்ற விளைவுகள் மின்சாரம் என்று ஒன்று இருப்பதைக் காட்டுகிறது. எனவே ஒரு பொருளைக் காணாத போதிலும் அதன் விளைவுகளைக் கொண்டு அப்பொருள் இருப்பதை நாம் நம்புகிறோம்.
வெளிநாட்டிலிருக்கும் மக்களோடு நாம் எளிதில் உடனடியாகத் தொடர்பு கொண்டு பேச முடியும்இ என்று தொலைபேசியைப் பற்றி அறியாத ஒருவனிடம் கூறினால் அவன் நம்ப மறுப்பான். நமது சத்தம் தூரமான இடத்திற்குச் செல்ல முடியாது என்று அவன் சாதிப்பான். அவன் நம்பாதபடியால் அது பொய்யாகிவிடாது. தொலைபேசி முலம் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நாம் அறிவோம்.


வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைகள் எங்கும் இருக்கின்றன என்பதை அவற்றைப்பற்றி அறியாத எவனும் நம்பமாட்டான்.அவன் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அலைகள் இருக்கின்றன என்பது நமக்கு நிச்சயம் தெரியும். இந்ந அலைகளை நாம் கண்டதில்லைஇநமது உடலில் உணர்ந்ததுமில்லை. எனினும் அவற்றின் மூலம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டும் இருப்பதால் அவைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கூறியிருப்பதினின்று ஊகிக்கிறோம். காண்கிறதை மட்டுமே நம்புவேன் என்று நாம் கூறினால் காற்றுஇ மின்சாரம்இ தொலைபேசிஇ வானொலிஇமற்றும் தொலைக்காட்சி அலைகள் என்பவற்றைக் குறித்து ஒருவர் விளக்கிச் சொன்னபின்பும் நம்ப மறுப்பவனைப் போலாவோம்.


காணாததை நம்புவது எப்படி?


வானொலி அலைகள் இருப்பதை ஒருவனை நம்ப வைக்க வேண்டும் எனில் வானொலிப் பெட்டியைக் காண்பித்து அதன் திருகுகளைச் சரியான அலைவரிசைக்குத் திருப்பி வானொலி நிகழ்ச்சியைக் கேட்கச் செய்வது மட்டுமின்றி அது எவ்வாறு நடைபெறுகிறது என்று விளக்க வேண்டும்.


நமது விளக்கம் அவனுக்கு ஏற்றுக் கொள்ளும்படி தோன்றினால்தான் அவன் நம்புவான்.
கடவுளைக் காண்பதற்கான இரகசியம்


கடவுள் நமது புறக்கண்களுக்குத் தெரியும் வண்ணம் எப்பொழுதும் காட்சி தந்து கொண்டிருப்பதில்லை. ஆனால் அவரை நமது உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியும்.


வானொலி அலைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் வானொலிப் பெட்டியைச் சரியான அலைவரிசைக்குத் திருப்ப வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இவ்வாறே கடவுளைக் காண வேண்டுமெனில் அவரைப் புரிந்து கொள்ளும் 'அலை வரிசை'க்கு நம் உள்ளத்தைத் திருப்ப வேண்டும்.


http://www.geocities.com/truegodjesus/jesus.html