உங்களுக்குத் தெரியுமா ?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!


1.இரட்சிப்பு என்றால் என்ன?

பாவத்தில் இருந்தும்,பாவத்தின் தண்டனை
யில் இருந்தும்,பாவமான காரியங்களில் இருந்தும் விடுதலை பெற்றுக்
கொள்வதே இரட்சிப்பு. இந்த இரட்சிப்பு நெருப்பில் இருந்தோ, அல்லது
வியாதியில் இருந்தோ, அல்லது வறுமையில் இருந்தோ, அல்லது தனிமையில்
இருந்தோ அல்லது வேறு எந்த விதமான கஸ்ட நஸ்டத்தில் இருந்தோ
முற்றிலுமாக தப்பித்துக் கொள்வதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
2.பாவம் என்றால் என்ன?

பாவமானது, எந்த வித சிந்தனைகளினாலும்
எந்த வித வார்த்தைகளினாலும,; அல்லது நமது செய்கைகளினாலும்,நமக்கு
தேவனால் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளில் இருந்து ஒரு சிறிதாகிலும்
விலகி நாம் நடப்பதே பாவம் எனப்படும். (எல்லோரும் பாவம் செய்து தேவ
மகிமையற்றவர்களானார்கள்.ரோமர் 3:23)
3.கடவுள் இதற்காக என்ன செய்தார்?

கடவுள் தாமே மனுசர்மத்தியில் மனிதனாக
இயேசு கிறிஸ்துவாக இந்த மண்ணில் பிறந்து பாவமே
செய்யாமல் வாழ்ந்து, பாவத்துக்குரிய தண்டனையை தாமே ஏற்றுக்கொண்டு
தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி, சிலுவையில் அறையப்பட்டார். பாவம்
செய்தவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவர் பெற்று
விடுதலையை பாவிகளாகிய மானிடருக்கு அருளினார்.

(மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு,நம்முடைய துக்கங்களைச் சுமத்தார் நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு,சிறுமைப்பட்டவரென்று
எண்ணினோம். நம்முடைய மீறதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,நம்முடைய
அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;:நமக்குச் சமாதானத்தை
உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது:அவருடைய தழும்புகளால்
குணமாகிறோம்.ஏசையா 53:4,5)

இரத்தம் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
பாவத்தின் மரணக் கட்டுக்களை முறித்து அவர் கல்லறையிலிருந்து
உயித்தெழுந்தார்.உயிர்த்தெழுந்ததின் ஊடாக சாத்தானை முறியடித்தார்.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து எங்களுக்காக மரித்ததினால் தேவன்
நம்மேல் வைத்த அன்பை விளங்கச் செய்தார்.

4. யாருக்காக இயேசுகிறிஸ்து மரித்தார்?

தங்களது நிலை குறித்து தங்களால்
ஒன்றுமே செய்யமுடியாத மக்களுக்காக,பலதேவைகளையும்,நொந்து போன
இருதயத்தையும் தவிர வேறு ஒன்றுமே இல்லாதவர்களுக்காக,தேவனுடைய
கட்டளைகளை நிறைவு செய்ய முடியாதவர்களுக்காக,தேவனுடைய ஐக்கியத்தையும்
அவரது மகிமையையும் உணராதவர்களுக்காகவும் இயேசுகிறிஸ்து மரித்தார்.

5. எப்படி நாங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்?

இரட்சிப்பு! இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் (நம்பிக்கை) வைக்கின்ற யாவருக்கும் இந்த இரட்சிப்பு கிடைக்கும்.
(அவராலேயன்றி வேறாருவராலும் இரட்சிப்பு இல்லை,நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுசர்களுக்குள்ளே அவருடைய
நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. அப்.4:12
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன்
வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள். அப்.16:30)

இந்த இரட்சிப்பை வேறு எந்த
வகையினாலும் பெற்றுக் கொள்ளமுடியாது. நன்மை செய்வதோ,மதசடங்கு
ஆச்சாரங்களை கைக்கொள்வதோ,தன்னைத் தானே பலியாக ஒப்புக் கொடுப்பதோ
அல்லது நாமாக வேறு எந்த வகையினாலும் பெற முடியாதது இரட்சிப்பு ஆகும்.
இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள விரும்புகிற எவரும் இயேசுகிறிஸ்துவின்
மேல் விசுவாசம் வைத்து அவரண்டையில் வரும் போது இரட்சிப்பைப் பெற்று
பரிப+ரணமாகலாம். இயேசு சொன்னார்: (என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே
தள்ளுவதில்லை. யோ.6:37)

தேவன் தாமே உங்களனைவரயும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.

ஆமென்.கர்த்தராகிய இயேசுவே வாரும்.