இன்னும் மாறப் புதினம் இது ...


 போதகர் இ. தர்மலிங்கம்
 
    
     விடிந்தால் எப்போது செய்தித்தாள் வரும் என்றொரு கூட்டம் ஏங்கிக் கொண்டிருக்க,செய்திக்காக எந்த நேரமும் தொலைக்காட்சி;ப் பெட்டியை உற்று நோக்கிய வண்ணம் இன்னொரு கூட்டம் உட்காந்திருக்க, உலக நிகழ்வுகளை பெட்டிக்குள் அடக்கவும், நானே முன்னர் சேகரித்தேன் என்று பெருமை பாரட்டவும், புகைப்படப் பிடிப்பாளர்களும், செய்தி சேகரிப்பாளர்களும் எட்டுத் திசையும் படையெடுக்க, இவ்வாறு தான் செய்திகளின் பரம்பல் தொடர்கின்றது. இதில் விநோதம் என்னவென்றால் எந்தச் செய்தியும் கணத்துக்கு கணம் அதன் வலிமையை இழந்து விடுகின்றது. மூன்று நிமிடத்திற்கு முன்னே வந்த செய்தி இந்த நிமிடத்தில் பழைய செய்தியாகி விடுகின்றது. கோடி கோடியாக புத்தகங்களும் சஞ்சிகைகளும் அச்சடிக்கப்பட்டாலும் அடுத்த மாதமே குப்பைத் தொட்டிக்குள் குடித்தனம் செய்யப் போய் விடுகின்றன. ஆளுக்காள், மூலைக்கு மூலை எப்போது புதுச் செய்திகள் வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

     இயேசு உயித்தெழுந்தார் என்னும் செய்தியை உலகமக்கள் அறிந்து விடக் கூடாது என்பதற்காக லஞ்சம் கொடுத்து சீடர்கள் அவர் உடலை எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்னும் வதந்தியை வஞ்சகர்கள் பரவச் செய்ய முயற்சித்தனர். ஆனால் தேவாதிதேவனின் உயிர்தெழுதல் உலக ஐPவராசிகளின் மீட்புச் செய்தி என்தால் இந்த ஊர்வாய்க்கு தேவனால் மூடி போடப்பட்டது. இந்த மூடி தான் இன்னும் எத்தனை புறங்கள் எழுந்தாலும் அத்தனையும் பொய் என்று பறை சாற்றிக் கொண்டிருக்கின்றது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இராவிட்டடால் மனிடவர்க்கத்தின் உயிர்த்தெழுதல் என்பது ஒரு வெறும் பிரமையே.

     முதல் ஆதாமாகிய தேவன் உருவாக்கிய மனிதன் பாவப்பிணியில் விழுந்தது காரண மாய், சாபமும், மரணமும், மனிதனின் வாழ்வுக்குள் வந்தது. மனிதன் தேவனின் உறவில் இருந்து பிரிக்கப்பட்டடான். இவ்வாறு பிசாசின் தந்திரத்தால் எல்லாவற்றையும் இழந்த மனிதன் இழந்தவற்றை மீண்டும் பெற இரண்டாம் ஆதாம் என்று அழைக்கப்படுகின்ற என் ஆண்டவர் இந்த பூமியில் தோன்ற வேண்டிய அவசியம் உண்டாயிற்று. மீட்புக்காய் கொடுக்கப்பட்ட விலை தான் எங்கள் மீட்பர் சிலுவையில் தொங்கி, தம்முயிரை கொடுத்ததாகும்.  கடவுளைக் கொல்ல முடியுமா?. அவரை யாரும் கொல்லவில்லை. மனித வர்க்கத்தை மீட்பதற்காக, என்னுயிரை நானே கொடுக்கின்றேன், அதனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, திரும்ப எடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று இயேசு தன் மரணத்தைக் முதலாம் ஆதாம் விற்றுப் போட்டதை வட்டியோடு கொடுத்து வாங்க விலைப்பணமாகவே கர்த்தர் உபயோகித்தார்.

     இயேசு சிலுவையின் ஐPவனை விட்டார் என்பதற்கு உலகம் சாட்சி கொடுக்கின்றது. அதனi விட அவர் மரித்த சிலுவையே இன்னுமொரு சாட்சியாய் உயர்ந்திருக்கின்றது. சிலுவை ஒரு புனித சின்னம், nஐகத்து இரட்சகர் இயேசு மரித்துயிர்த்தெழுந்த சிலுவையோர் புனிதச் சின்னம் என்று பாடுகின்றான் பக்தன். கல்லாதவன் ஆனாலும், கற்றவனானாலும், ரோமனனாலும், கிரேக்கனனாலும், சிலுவையின் பற்றிய உபதேசம் அவர்களுக்கு பைத்திய மாகத்தான் தோன்றும், ஆனால் இரட்சிக்கப்படும் நமக்கோ தேவபெலனுள்ளதாய் இருக்கின்றது. இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை நிருபிக்க இந்த சிலுவை எப்படி நமக்கு சாட்சி சொல்லுகின்றது என்று சிந்திக்கலாம். மரணம் அடைந்த மனிதன் அடக்கம் பண்ணப்படல் வேண்டும் என்பது நியதி. இயேசு மரித்த போது அரிமத்தேயா ஊரானாகிய யோசயப்பும், இராக்காலததி;ல் இயேசுவிடம் வந்து செய்தி கேட்ட பரிசேயனாகிய நிக்கேதேமுவும் பிலாத்துவினித்தி;ல் சென்று உத்தரவு கேட்டு அவர் சடலத்தை சிலுவையில் இருந்து இறக்கினார்கள் என்று வேதம் சொல் லுகின்றது. சடலம் அகற்றப்பட்ட சிலுவையை இன்றுவரைக்கும் உலகம் கண்டு கொண்டிருக்கிறது. வேத ஆராட்சியாரர்களின் தரவின் படி இந்த சிலுவையின் சிறிய துண்டு ஒன்று இன்னும் ரோமாபுரியில் உள்ள தொன்பொருள் கண் காட்சியகத்தில் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாம் . ஆகையினால் தான் கிறிஸ்தவர்கள், முழு மையான சத்திய வசனத்தை விசுவாசிக்கும் விசுவாசிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வெறும் சிலு வையே தங்கள் ஆலயங்களிலும், வீடுகளிலும், வைத்திருக்கின்றனர். வெறும் சிலுவை இரண்டாயிரம் ஆண்டுகளாய் காலத்தால் அழியாத சாட்சியாய், நின்று நிமிர்ந்து, நோக்கிப் பார்ப் பவர்களுக்கு விடுதலை யையும், நிம்மதியையும், நித்திய வாழ்க்கைக்கான வழியையும், அளித்துச் சொல்லி நிற்கின்றது. சிலுவைக்குள் தான் நாம் மருந்தெடுக்கின்றோம். உலகத்தின் எந்த பட்டணமானா லும் சரி, கிராமமானாலும் சரி, வைத்தியத்திற்கு அடையாளச் சின்னம் என்னவென்றால் சிலுவை தான். இந்த சின்னம் பிடிவாதம் மிக்க முகமதியானாலும் சரி, எதற்கும் ஒத்தூதம் எம்மதததினனா லும் சரி, அறிந்த சின்னம் இது தான். மருந்தெடுக்க வேண்டுமானால் சிலுவைக்குபோ. ஆம் அந்த மருந்து தான் அருள் மருந்து தரும் ஒரு மருந்து இயேசு கிறிஸ்து.

     வெறும் கல்லறை! வியப்புற வைக்கும் சாட்சி. மனிதனின் இறப்பிற்குப் பின்னாலும் இன்னொரு வாழ்க்கையுண்டு என்று கட்டியம் கூறுகி;ன்றது. பிறப்பின் போதே இறப்பு நிச்சயிக்கப்படுகின்றது.

     இந்த உலக த்தின் ஒரு முடிவு என்பது அந்த உலகத்தின் ஒரு ஆரம்பம். வாழ்க்கையை முடித்துக் கொண்டால் முடிந்தது தான். தான தர்மமோ, கிரியைகளோ நரகத்தில் இருந்து நம்மை மோட்சத்துக்கு கொண்டு போகப் போவதில்லை. கறந்த பால் முலைபுகா, கடைந்த நெய் மோர்புகா உடைந்த சங்கின் உயிரும் ஓசையும் உட்புகாதாது போல்; முடிந்தால் முடிந்;தது தான்.

     ஆனால் வெறுமையாய் சாட்சி பகரும் கல்லறை அந்த உலகத்தின் வாழ்க்கைக்கு நம்மை அழைக்கின்றது. இதில் இரண்டு இடங்கள் சம்பந்தப்படுகின்றது. ஒன்று சொர்க்கம் என்றழைக்கப்படும் பரலோகம். இன்னொன்று நரகம். சொர்க்கத்தின் வாசலூடாக நுழைவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக காணப்படல் வேண்டும் . ஏனெனில் இந்த மோட்சத்தில் தான் பரிசுத்தமான தேவன் வாசம் பண்ணுகின்றார். பரிசுத்தமான தேவனிடத்தில் பாவம் என்னும் அசுத்தம் நிறைந்த மனிதன் செல்ல வேண்டுமாயின் அவனும் பரிசுத்தமாக்கப்படல் அவசியம். இந்த பரிகாரத்தை இந்த  ஈனச்சிலுவையின் உலக இரட்சகர் நமக்காய் சம் பாதித்துக் கொடுத்துள்ளார். அவரின் (இயேசுவின்) இரத்தம் நம்மை சுத்திகரித்து, பாவம், மரணம் என்ப வற்றில் இருந்து விடுதலையாக்குகின்றது. அத்துடன் நம்மை தேவனின் ஐனங்களாகவும், பர லோகத்தின் பிரiஐகளாகவும் மாற்றுகின்றது. ஆகையினால் இன்று வரையும் மாறாத சாட்சியாய் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் செய்தி மனிதனே உன்னை மற்றவல்லதாய் இருக்கின்றது. பாவிகளை இரட்சிக் கவே இயேசுபெருமான் பூமிக்கு வந்தார். மரித்தார், உயிர்த்தெழுந்தார், மீண்டும் வரப்போகின்றார்!

இந்த வருகைக்கு நீங்கள் ஆயத்தமா? ஆயத்தமா? ஆயத்தமா?

 http://www.mcfwc.com/magazine/volume1/v1A1.html