இயேசு பிறப்பு
உலகிற்கு சரித்திரம் கொடுத்த இயேசுவின் பிறப்பு பற்றியது
உலகிற்கு சரித்திரம் கொடுத்த இயேசுவின் பிறப்பு பற்றியது
ஒரு காலத்தில் சரித்திரம் இல்லாமல் இந்த உலகம் இருந்து கொண்டிருந்தது. மனிதனால் விட முடியாத பாவம் என்னும் இருளை நீக்க ஜீவ ஒளியாக உலகின் தீர்க்கதரிசியாக, முதல் மனிதன் ஆதாமில் இருந்து 60ம் தலைமுறையில் மரியாளுக்கு தெய்வ மகனாக இயேசு பிறந்தார். அதன் பின் தான் சரித்திரமற்ற இந்த உலகம் தனக்கென சரித்திர வடிவம் பெற்று கி.மு., என்றும்., கி.பி., என்றும் உரு கொண்டது.
உலகின் இயேசுவின் பிறப்பு மட்டுமே நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்து என்றால் தீர்க்கதரிசி என்றும், இயேசு என்றால் பாவங்களில் இருந்து விடுவிப்பவர் என்றும் அர்த்தமாகும். சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக ஆதாமில் இருந்தே இயேசுவின் பிறப்பு பற்றி தீர்க்கதரிசிகளால் முன்னமே அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, 700 ஆண்டுகளுக்கு முன் ஏசாயா தங்கள் தீர்க்கதரிசி கூறும் போது, 'வானத்தில் அடையாளம் தோன்றும்; கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள்' என்றும், 'அவர் அதிசயமானவர்; ஆலோசனை கடவுள்; வல்லமை உள்ள முக்கிய கடவுள்; சமாதான பிரபு எனப்படும். மேலும், மரணத்தை வெற்றி கொள்வார்' என்றார். சகரியா தீர்க்கதரிசி கூறும் போது யூரோ தேசத்தில் உள்ள பெத்லேகமில் பிறப்பார் என்று கூறியுள்ளார்.
அதேபோல், ரோம் பேரரசர் அக்ஸ்டஸ் சீசரின் ஆட்சி காலத்தில் யூதோ நாட்டு பெத்லகேமில் ஒரு பகுதி ராஜாவாக இருந்த ஏரோதின் நாட்களில் தீர்க்கதரசின்படி இயேசு பிறந்தார்.
பல நூற்றாண்டுகளாக யூத குலத்தை சேர்ந்த கன்னிப் பெண்கள் தீர்க்கதரிசியின் வசனப்படி கிறிஸ்துவின் பிறப்பை ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதேபோலவே, கலிலியோ நாட்டில் நாசரேத்தை சேர்ந்த யோசப்புக்கு, மரியாள் என்ற பெண் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கடவுளின் தூதன் கபீரியேல் கன்னியான மரியாளிடம் கூறும் போது, 'நீ பரிசுத்த ஆவியாய் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனை பெறுவாய்' என்றார். பின், மரியாள் கர்ப்பவதியானாள். கர்ப்பவதியான செய்தி அறிந்து, யோசப்பு தவறாக எண்ணி மரியானை ரகசியமாக ஒதுக்கிவிட நினைத்தார். அப்போது தேவதூதன் யோசப்பிடம் தோன்றி மனைவியாக நிச்சயிக்கப்பட்ட மரியாளை சேர்க்க பயப்படாதே; அவர் ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயரிடு என்றார்.
அதன் பின், இயேசுவே மரியாளுக்கு பெருமளவு துணையாக இருந்தார். தீர்க்கதரசியின் வசனம் போலவே, இவர் பிறந்த போது வானத்தில் இதுவரை தோன்றிடாத நட்சத்திரங்கள் தோன்றியதை கண்டு கிழக்கு தேசத்து வான சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து இயேசுவை கண்டு பொன் போன்ற பரிசுகளை வழங்கி, வணங்கி சென்றனர். இயேசு பிறந்த செய்தி அறிந்த ரோம பேரரசன் ஏரோது, யூதருக்கு ராஜாவாக பிறந்த இயேசுவை கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். தூதன் மூலம் தகவல் அறிந்த ஏசோப்பும், மரியாளும் இயேசுவை தூக்கிக் கொண்டு எகிப்துக்கு சென்றனர். ஏரோது மரிக்கும் வரை அங்கிருந்த பின், கலிலியோவில் உள்ள நாச ரேத் நகரில் தங்கி வசித்தனர்.
இயேசு கிறிஸ்து கி.பி., 30ல் தனது 30 வயதில் தன்னை முழுமையாக கடவுள் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். போதுரு, அந்திரேயோ, பிலிப் பு, யாக்கோபு, தோமா, யோவான், மத்தேயு, யாக்கோபு, யூதா, பர்தொலொ என்னும் 12 சீடர்களுடன் மக்களுக்கு அற்புத பணிகளை ஆற்றினார்.
நானே வழியும், சத்தியமும், ஜீவனாகவும் இருக்கிறேன். நானே உலகின் ஒளியாகவும் இருக்கிறேன். நானே நல்ல மேய்ப்பன். நானே உயிர்த் தெழுந்தாலும் ஜீவனுமாக இருக்கிறேன் என்றார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கூறு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறினார்.
மேலும் மரித்தோரையும் உயிரோடு எழுப்பினார். யூதோ இனத்தை சேர்ந்த இவர், மக்கள் அனைவரையும் நேசித்ததால், பொறாமை கொண்ட சொந்த ஜனங்களே இவரை கொல்ல வழி வகுத்தது. முன்னறிவிப்பின் படியே, இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இவரது பிறப்புக்கு பின், கி.பி., 313ல் ரோமோ பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றதால் கிறிஸ்துவ சமயத்தை மட்டும் பின்பற்ற ரோமில் கட்டளையிட்டார். இதன் மூலம் இயேசுவால் உலக வரலாறு கி.மு., என்றும் கி.பி., என்றும் பிரிக்கப்பட்டது