இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

யாழ்ப்பாணம் அருட்கவிஞர் ஆழ்வார்பிள்ளை(அவாகளது வாழ்க்கை வரலாறு)


 
      
இலங்கைத் தீவின் திலகமாகவும், கல்வி, செல்வம், மதம், பக்திஆசாரம், விருந்தோம்பல் என்பவற்றுக்கு நிலைக்களமாகவும் விளங்குவது யாழ்ப்பாணம் என்னும் குடாநாடே. இதில் 13 பிரிவுகள் உள்ளன. அவற்றுள் வடமாராட்சிப் பகுதியொன்று. இதில் உபபிரிவு கட்டைவேலி என்னும் ஊர். இக்கிராமத்திலே உயர்சைவ சூரிய வேளாளகுலத்திலே, சிற்றம்பல பிள்ளை பரம்பரையிலே 1891ம் ஆண்டு மார்ச் மாதம் 7;ம் நாள் தோன்றியவர் ஆழ்வார் பிள்ளை என்னும் அரும்புதல்வராவர்.

அக்கிராமத்திலிருந்த மெதஸ்டிஸ் மிசனரி பாடசாலையிலே அவர் தமது ஆரம்ப கல்வியைத் தொடங்கினார். மாண வர் மத்தியில் மிகுந்த புத்திக் கூர்மையும், மூளைத்திறனும், கல்வி ஆர்வமும் கொண்டவராய்க் காணப்பட்டார். இவரது தந்தையார் ஒரு சிறந்த இசையாசிரியராய் இருந்தமையால் தனது அரிய மகனுக்கும் இளமையிலேயயே இசைப்பயிற்சி அளித்து வந்தார். நாட்டுப்பாடல்கள், கலைகள், இலக்கியங்களில் அதிக பயிற்சி பெற்றார்.

 

தனது 13ம் வயதில் ஒரு வரகவியாகி சிறப்பான கவிதைகளை எழுதத்தொடங்கினார். பாடசாலையில் தமது பக்திவிரு த்திக்கு முன்மாதிரியாய் இருந்த ஓர் கிறிஸ்தவ ஆசிரியரின் அன்பினாலும், அரவணைப்பினாலும் ஆட்கொள்ளப்பட்ட ஆழ்வாள் பிள்ளை Nஐம்ஸ் என்னும் கிறிஸ்தவ பெயரை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவரானார். பின்னரும் அவர் சைவ, வைஸ்ண வ ஆசாரியர்களை அணுகி, அம்மதங்களின் நூல்களை ஆராய்ந்து, தெளிவுறக் கற்கலானார்.

 

சிவஞானபோதம், சிவஞானசித்தியார் போன்ற சைவநூல் களைக் கற்றுத் தேறிய அவர், சைவசித்தாந்தத்தில் ஒரு சிற ந்த அறிஞரானார். அறிவாற்றலும், பேச்சுவன்மையும் கொண்ட அவர் பல்வேறு பகிரங்கக் கூட்டங்களிலும், கவிஅரங்கங்களிலும் பங்குபற்ற அடிக்கடி அழைக்கப்பட்டார்.

 

1910ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரிய கலாசாலையில் உயர் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டார். பயிற்சிமுடிவில் சிறந்த மாணவனாக வெளியேறிய அவர், அக்கல்லூரியிலேயே ஆசிரிய ராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே தாம் கற்றிருந்த ஆங்கில அறிவை விருத்திசெய்வதற்கு இக்கலாசாலை வாழ்;க்கை அவருக்கு மிகவும் அனுகூலமாயிருந்தது. இருவருட கால எல்லைக்குள் ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் மிகுந்தவரானார்.

 

1915ம் ஆண்டளவில் அவர் யாழ் மத்திய கல்லூரியில் தமிழ் பண்டிதராகவும், மிசனரிமாருக்கு தமிழ் போதிக்கும் ஆசிரியராக வும் நியமிக்கப்பட்டார். அவ்வாண்டிலேயே யாழ்;ப்பாண ஆரிய திராவிட சங்கம் நடாத்;தும் பண்டிதப் பரீட்சையில் முதல்பிரிவில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்திலும், அன்று நடைமுறை யிலிருந்த ஆசிரிய தராதரப்பரீட்சையிலும் முதற்பிரிவில் தேர்ச்சி பெற்றார்.

 

பருத்தித்துறை என்னும் பட்டணத்தில் விளங்கிய பிரபல மெதடிஸ்த கல்லூரியான ஹாட்லி கல்லூரிக்கு தமிழ் ஆங்கில ஆசிரியராக மாற்றம் செய்யப்பட்டபோது அவருக்கு வயது 25.

 

தமது 25ம் வயதில் திருமண வாழ்க்கையை ஆரம்பித் தார். கரவெட்டி வாசியான Nஐhன் முருகப்பிள்ளை இராமுப்பிள்ளை என்பவரின் மூத்த குமாரியான இலக்குமி அம்மையாரைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்று. அன்பும் அறமும் திகழும் இனிய இல்லறவாழ்க்கையை நடாத்தலானார்.

 

இயல், இசை என்னும் இருதுறைகளிலும் தேர்ச்சி பெற்ற இவர், நாடகத்துறையிலும் பெரும் புகழ் பெற்றார். நாடகங்ளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். ஆங்கிலச் சொற்பொழிவுகளை அடுக்குத்தமிழில் மொழிபெயர்ப்பதில் பெரும் சாமார்த்தியம் அவருக்கிருந்தது. அவரது மனைவியா ரும் ஒர் பயிற்சி பெற்ற ஆசிரியையாயிருந்ததால அக்கால வாழ்க்கைக்கு அவர்கள் வருமானம் போதியதாயிருந்தது.

 

அவர்களது முதல் இரண்டு குழந்தைகளும் சிறுநாட்களிலேயே இறந்து போக, மூன்றாவதாகப் பிறந்த ஆண் குழ ந்தையும் பிறந்த 3ம் நாள் மரணத்துக்கேதுவான நோயினால் பீடிக்கப்பட்டது. 3ம் நாள் மரித்துவிடும் என்று வைத்தியர் கூறிவிட்டதால், ஒருபகுதியார் மரணச்சடங்குக்கேற்ற ஆயத்த ங்கைளச் செய்யச், பெற்றோர் இருவரும் விசுவாசத்தோடு கூடிய வேண்டுதலை ஏறெடுத்து, சுகம் கிடைத்தால் அந்தப் பிள்ளையை ஆண்டவருக்கே அடிமையாக்குவோம் என்று அர் ப்பணித்து நின்றனர். இரத்தமே கக்கி, நாடி இழந்து, மூச்சுத் திணறித் தவித்த குழந்தை சுகம் பெற்றது. பெற்றோரின் வேண்டுதலோடும், அர்ப்பணிப்போம் வளர்க்கப்பட்ட அப்பையனே இன்று மெதடிஸ்த சபையில் ஊழியம் செய்யும் அருள்திரு எம்;.ஏ. இரத்தினராஐh ஆவார். நான்காவதாக பிறந்த பெண்குழந்தைக்கு பெற்றது போதும் என எண்ணியோ பாக்கியலட்சுமி என்று பெயரிட்டனர்.

 

ஆசிரியராக இருந்த காலத்திலேயே வழக்கறிஞராக வரவிரும்பிய ஆழ்வார்பிள்ளை, புறோக்கட் நோட்டரி (Pசழஉவழச யனெ ழேவயசல) பரீட்சைக்கெனப் பயிற்சி பெற்று முதல்பிரிவில் தேர்ச்சிபெற்றார். சிறிதுகாலம் சேவை யாற்றிய பின்னர், மீண்டும் அவருக்கு ஆசிரியத் பணியிலேயே நாட்டமுண்டாயிற்று. எனவே அரசாங்கப்பாடசாலையான கண்டி மத்திய கல்லூரிக்கு தலைமை ஆசிரியாராகச் சென்றார்.அவரது திறமையைக் கண்ட அரசாங்க கல்வித் திணைக்களம் அவரை பிரதம வித்தியாதிகாரியாக நியமித்தது. கீழ் மாகாண கல்வியதிகாரியாகச் சென்ற அவர் சிறந்த சேவை யாற்றினார்.

 

பௌத்த குருமாரிடம் சிங்கள மொழியை முறையாகக் கற்ற அவர், அதில் பாண்டித்தியம் பெற்று அம்மொழியை அழகாகப் பேசவும், எழுதவும் கற்றுத் தேறினார். தமிழ்மொழி மூலம் சிங்கள மொழியை கற்றுக் கொள்ளும் வகையி;ல் சிங்கள ஆசான் என்னும் அரிய நூலை ஆக்கினார். அதற்கு அதிக வரவேற்பு இருந்தமையால் இரண்டாம், மூன்றாம் பதிப்புக்களும் வெளிவந்தன.

 

தமிழ்மொழி மேல் சிறந்த பற்றும், ஞானமும் படைத்த அவர், ஒர் அபிமானியாகவும் மாறவேண்டிய கட்டம் ஏற்பட்டது. அவரது மேலதிகாரியாக இருந்த ஓர் சிங்கள அதிகாரி யின் அதிகாரியின் அதிகாரப் போக்கைக் கண்டித்த அவர், இறுதியில் சிங்கள ஆதிக்க வெறியைக் கண்டித்து, தம் பதவியை விட்டு விலகினார்.

 

மறுபடியும் யாழ்ப்பாணம் திரும்பிய அவர் தமது காலத்தை தமிழ்மொழி வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்தலானார். இக்காலத்திலேயே அவருக்குள் பதிந்திருந்த திறமை, ஆர்வம், ஞானம், வரங்கள் யாவும் வெளிவீசத் தொடங்கின. கிறிஸ்த பக்தரான அவர் தம் ஆண்டவராகிய கிறிஸ்து பெருமான் பேரில் கவிகள் பாடலானார். வாராந்த, மாதாந்த பத்திரிகைகளுக்கு சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை

எழுதலானார். சத்திய வேத அம்மானை, நசரேயப்பாமாலை, நசரேயப்பந்து, நசரேய இரட்டை மணிமாலை, நசரேய மும்மணிக் கோவை,நசரேய புராணம், நசரேய அந்தாதி, கிறிஸ்தவ பஞ்சாமி ர்தம் என்னும் சிறந்த நூல்களை அவர் ஆக்கினார். அவற்றில் சில ஏற்கனவே அச்சேறிவிட்டன. வேறு சில தற்போது நூல்வடி வாகிக் கொண்டிருக்கின்றன.

 

இஸ்லாமிய மதத்திலும், சிறந்த ஞானமும், அறிவும் கொண்ட அவர், இஸ்லாமிய நீதிநெறி, இஸ்லாமிய கதாமாலை,

இஸ்லாமிய வினா விடை, நாயகபுராணம் போன்ற அரிய நூல்களையும் ஆக்கினார். இவற்றுள் சில நூலாகி விட்டன. வேறு சில அவர் மகனிடம் பிரதிவடிவில் உள்ளன.

 

இவற்றைவிட, பலவேடிக்கைப் பாடல்களையும், இந்து மதப்பாடல்களையும், உணவும், குணமும் என்னும் சுகாதாரப் நூல்களையும் அவர் ஆக்கினார். 13 வயதிலேயே பாடல்வரம் பெற் றஅவர், பண்டைக்கால மரபின் வழிப்படி பல அற்புத கவிகளை களையும் ஆக்கியுள்ளார். சித்திக்கவிகள், அக்கரச் சதகம், எழு த்து வருத்தினம், சுழிக்குளம், நான்காரைச் சக்கரம், கரந்துறைப் பாட்டு, தேர்வெண்பா, மாத்திரைச் சருக்கம், மாத்திரை வருத்தனம் போன்ற சிறந்த கவிகள் பலவும் பாடியுள்ளார்.

 

தப்பான பாடல்களைப் பாடுவோர் அவரிடமிருந்து தப்பவே முடியாது. எதுகை, மோனை தெரியாது, தமிழ் இலக்கண மரபறி யாது, பாடல் கவி எழுதுவோர் அவர் கண்ணிலும் படக்கூடாது. கவி எழுதத் தெரியாதோன் கவிஞன் அல்ல, இன்று தமக்குத் தாமே பட்டஞ் சூட்டி, உப்புச் சப்பில்லாத உழுத்த பாடல்களை எழுதுவோர் தமிழ்தாயைக் கொலைசெய்யும் பாதகர் என்பது அவர் எடுத்த முடிவு. சமிக்ஞை கொடுத்ததும், சமயோசிதமாகப் பாடும் வரகவி அவர்களுக்கு, இன்றைய கவிஞர்களின் இலக்கணமற்ற கவிகள் வெறும் குப்பையாவே காணப்பட்டன. குட்டுவ தற்கும், வெட்டுவதற்கும் கூத்தன் பாண்டியரில்லை, இல்லையாத லால் கூச்சலோடு வருவதெல்லாம் இன்று கவிகளாகி விட்டன. இவ்வரிசையில் பல கவிஞர்களின் வெண்பாக்களும், பாடல் களும் ஆழ்வார்பிள்ளையின் பெருங்கண்டனத்துக்குள்ளாயின

 

அக்கால கவிஞர்களை கண்டித்து, இழிவுபடுத்தும் முறையில் அன்னார் எழுதிய தமிழ்த்தாயின் ஓலம் என்னும் நூலில் இன்றைய பாடல்களில்


மாவெங்கே புளியெங்கே கருவிளங்க விளக்கமெங்கே மாவிலுள்ள

பூவெங்கே காய்கனியும் தண்ணிழலுஞ் சேர்ந்து வருபொருத்தமெங்கே

கூவெங்கே நூலெங்கே நூனூற்றவிழையெங்கே பாவியேனின்

காவெங்கே யெனதருமைப் புதல்வர் காளெனை யாற்றக் கடுகுமென்னே!

 

என்றும், சில்லறைப் புலவர்க்குப் பல்லறை என்னும் பாடலில்

 

1. யாப்புமறியார் இலக்கணத்தின் வாலறியார்

  கோப்பு மறியார் குணமாறியார் -ஆப்பை

  இழுத்த குரங்காயிடர்ப்பட்டுத் தாயின்

  கழுத்தையறுத் தெறிவார் காண்

 

2. வெண்பா எழுத விரும்பி அதை வீணே

  மண்பாவாய் மாற்றி மளமளெனப் - புண்பாவாய்

  ஆக்கி முடிப்பா ரடி சீரறம் பிறமே

  தாய்க்; கேனிக் கொச்சை மக்கள் தாம்

என்றும் பாடிய பாடல்கள் அவரது சிறந்த தமிழ் அறிவையும், ஞானத்தையும் கண்டனக் கோபத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.


பேரோடும், புகழோடும் வாழ்ந்து தமிழ்மொழிக்கும், கிறிஸ்தவத் துக்கும் தொண்டு செய்த ஆழ்வார்பிள்ளையவர்களின் சேவை யைப் பாராட்டிய யாழ்ப்பாண கிறிஸ்தவ தமிழ்ச் சங்கம், அவரு குப் பொன்னாடை போர்த்திக் முத்தமிழ்ப் புலவர் என்னும் பெரும் பட்டமும் சூட்டி, கௌரவித்தது. அவ்வாறே சென்னையில் கூடிய அகில உலக கிறிஸ்தவ தமிழ்மகாநாடும், மரணத்துக்குப் பின் வழங்கிய பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் போற்றுதலுக்குரியது.

 

அன்னார் எழுதிய வேறு அரிய கவிகளும் பல உள்ளன. அவை ஆங்காங்கு தேசத்தொண்டன், உதயதாரகை, கிறிஸ்தவ தீபிகை சத்திய வேத பாதுகாவலன், புத்துயிர் போன்ற பத்திரிகைகளில் வந்துள்ளன. தமது தொண்டினை தாமே பாடலாக பாடிய புலவர் அவர்கள்


நாவினாலுனது நாமம் நவிற்றிட வைத்தாய் போற்றி

பாவினாலுனைத் துதித்து பக்குவமளித்தாய் போற்றி

ஆவியின் வரப்பிராசதமளித்தென்னை வழிநடத்திச்

சாவிலும் துதிக்க வைப்பாய் தற்பரா போற்றிபோற்றி

என்னும் அரிய கவிதை மூலம் விளக்கி வைத்தார்.

 

அன்னாரைப் பாராட்டி நல்லூர் பேராசிரியர் க.பே முத்தையா வழங்கிய கவி இதோ.


தேனைத் தமிழுடனே சேர்த்துக் கவியாக்கி

ஊனு முயிரு முணர்ச்சி பெற - வானின்

அமுதமெனத் தந்தாய் அடியேன் நிலவின்

குமுத மலரானேன் குளிர்ந்து

மட்டக்களப்பு கவிஞர் இராஐ பாரதி வழங்கியது

 

அருட் கவியே என்ஐயா ஆதித் தேவன்

ஆசிபெற்ற வரகவியே ஆழ்வார் பிள்ளாய்

தருக்க கலை வல்லாய் சொற் றமிழிற் பாடும்

தக்காருக் கெச்சமதாய்த் தலையெடுத்தோய்

சுருக்க மதாய் சொன்னால் முற்சமயம் மாறிச்

சூல்கொண்ட கம்பன் நீ சொல்லாராற்றல்

உருக்கு படா கவியினையும் ஓதக்கேட்டால்

உலகமனம் மாறுமடா உண்மை உண்மை.

 

அந்தாதி யாம் கண்டோம் கூத்தன் கண்டோம்

ஆங்கு விடு தூதினிலே சத்தி முத்த

விந்தாதி விந்தையெலாங் கண்டு கொண்டோம்

வெற்றிக்கு ரகஸ்யமுன் கருவிற் கண்டோம்

சிந்தா நன் மணிசொன்ன தேவன் ஆகும்

சொஞ் சொற்றீ சிலம்ரி விளங்கோவனாகும்

பந்தாடும் பாவண்ணம் பரிசு கண்டோம்

பாட்டாற்றப் பண்டிதனைப் பரக்கக் கண்டோம்.

இவ்வாறு கவிதை உலகில் கவிஞர்களைப் போற்றியும், கவி ஞர்களால் போற்றப்பட்டும் கவிமணியாகத் திகழ்ந்த கவிஞர் அவர்கள் தமது 77ம் வயதில் 1968ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17ம் திகதி கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அவரின் பூத வுடல் கொழும்பில் அடக்கம் செய்யப்பட்டது.

 

அறுசீராசிரிய விருத்தம்

 

சமிசைகள் கொடுத்துப் பாட்டுச் சட்டெனக் கேட்டாலங்கே

அமிழ்தினு மினியவாக அக்காலக் காளமேகன்

யமகண்ட முறையிற் போல எளிதினில் பாடவல்ல

நமதரும் புலவனாரை நாடிழந்ததுவே ஐயோ!

 

எழுதிக் கொண்டிருக்கும் பேனா வெடுக்காமலழிந்திடாமற்

பழுதெனக் கூறிக் கீறி பக்கத்து நுழைந்திடாமல்

மளமளப்பாகத் தீட்டும் வல்ல பாவலனையெண்ணி

அழுதிடாதென்ன செய்வேன்! ஆவின் பால் சுவைகுன்றாதே

 

புலவர் புகழ் பூமியெங்கும் ஓங்கட்டும்

அவர் சேவை அகிலமெங்கும் அறியட்டும்

அவர் பாடலால் ஆண்டவர் நாமம் பரவட்டும்!

 

நன்றி : கிறிஸ்தவ அருட்பாக்கள்

 

அக்கரச் சதகம்


பேர் பெருகு மோசேக்குக் பின்னிஸ்ரவேலர் தமை

சீராய் வழிநடத்திச் சென்றதியார்-காரிக்கு

வாகனம் யாது வரவழைக்கும் வார்த்தையேது

மா யோசுவா சுவா வா!

விதி: ஒரு சொல்லை ஒவ்வொரு எழுத்தாக நீக்க வேண்டும்.

மோசேக்கு பின் இஸ்ரவேலை நடாத்தியது :யோசுவா

வைரவரின் (காரி) வாகனம் : நாய்

வரவழைக்கும் வார்த்தை : வா

நீக்கிய முறை : யோசுவா, சுவா, வா