இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

பைபிள்:ஜீம்பாபேயின் முதல் தேசிய ஜெபநாள்

உலகிலேயே பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்துள்ள நாடுகளில் ஜிம்பாபே வும் ஒன்று. அந்நாட்டின் பணவீக்க விகிதம் 1200%, அந்நாட்டில் 80 சதவீதத்தினற்கு வேலையில்லை, இறக்குமதி செய்ய போதிய அந்நிய செலவாணி கையிருப்பில் இல்லை . இப்படி பொருளாதாரத்தில் மோசமான நிலையில் உள்ள தங்கள் நாட்டை உயர்த்த அந்நாட்டின் அதிபர் ராபர்ட முகபே( Robert Mugabe) எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்தும் பொருளாதரத்தை வலுவடையச் செய்ய முடியவில்லை .எப்படி தங்கள் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க என யோசித்த ஜிம்பாபே நாட்டின் அதிபர், கடந்த 25.06.2006 ம் நாளை நாட்டின் முதல் தேசிய ஜெப நாளாக (First National Day of Prayer)¢ அறிவித்திருந்தார். அந்நாளின் முக்கிய நோக்கம் தலைநகரான ஹராரேயில் மக்கள் கூடி தங்கள் நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த தேவனை நோக்கி மன்றாடுதலே.

ஜெப நாளில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் ராபர்ட் முகபே ஜெபநாளின் முக்கிய நோக்கம் “சபைக்கும் தேசத்திற்கும்¢ முக்கிய தொடர்பை ஏற்படுத்துவதும், சரிந்து கிடக்கிற நம் பொருளாதாரத்தை சரி செய்ய தேவஆலோசனை பெறுவதே” என்றார். மேலும் அவர் பிபிசி க்கு அளித்த பேட்டியில் “ நாங்கள் எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேற முடியவில்லை. எனவே சபைகள் எங்கள் குற்றங்கள் குறைகளை தெரிவிக்கட்டும், இனி சபையும் அரசும் சேர்ந்து தேவஆலோசனையுடன் எங்கள் பொருளாதாரத்தை உயர்த்த முடிவெடுத்திருக்கி¢றோம்” என்றார்ஒரு நாட்டின் அதிபர் வெளிப்படையாக தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தேவசமுகத்தில் நாட்டின் மக்களோடு விழுந்து கிடந்த இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டபோது, பரிசுத்த வேதாகமத்தில் II நாளாகம் 20 ம் அதிகாரத்தில் யோசபாத் என்ற ராஜா மோவாப் புத்திரரும் அம்மோன் புத்திரரும் திரளாக தனக்கு எதிராக யுத்தம் பண்ண வந்தபோது பயந்து கர்த்தரைத்தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தை கூறுவித்த நிகழ்ச்சிதான் என் மனக்கண் முன் தோன்றியது. யோசபாத் தேவனை நோக்கி கர்த்தாவே எங்களுக்கு விரோதமாக வந்த இந்த திராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை, நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று தெரியவில்லை என்று தேவனுடைய சமுத்தில் விழுந்து கிடந்தான், கர்த்தரும் அவனுக்காக யுத்தம் பண்ணினார் என்று வாசிக்கிறோம்.ஒரு நாட்டின் அதிபர் தன் மக்களோடு ஒரு ஜெபநாளை ஆயுத்தம் பண்ணி தேவசமுகத்தில் விழுந்து கிடக்கும்போது, உனக்காக நீ ஒரு ஜெபநாளை ஆயுத்தம் பண்ணக்கூடாதா? உங்கள் குடும்பத்திற்காக ஒரு ஜெபநாளை ஆயுத்தம் பண்ணக்கூடாதா? உங்கள் சபைக்காக சபையார் ஒரு ஜெபநாளை ஆயுத்தம் பண்ணக்கூடாதா? உங்கள் ஊரின் சேமத்திற்காக ஒரு ஜெபநாளை ஆயுத்தம் செய்யக்கூடாதா? இப்படிச் செய்தால் நம் தேசம்¢ தன் சேமத்திற்காக தேவனை நோக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
Bro. S.Reverent

http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=193