இயேசு தாமே மரணத்தை வென்றார்

வெளிப்படுத்தல் 1:18,வசனத்தில் இயேசு இவ்வாறு கூறினார் "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலஙகளிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." -- இது ஒரு பிரதான அற்புதம். அவர் மரணத்திலிருந்து எழுந்தபோது, அவர் பாவத்தையும் மரணத்தையும் வென்றுவிட்டார் என்பதை நிரூபித்தார.

இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய முழு விவரத்தை அறிய யோவான் எழுதிய சுவிசேஷத்தில 20, 21 ஆகிய அதிகாரங்களைப் படிக்கவும்.

ஒரு மனிதர் தம்மை ஆண்டவர் என்று கூறி தாம் மரித்த பிறகு மீண்டும் உயிரோடு வரவில்லை என்றால் அவர் வெறுமையான வாக்குறுதிகளைச் செய்தவராகவே கருதப்படும்.

மகதலேனா மரியாளை நோக்கி: (யோவான் 20:1, யோவான் 20:14-18).

சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள் (யோவான் 20:19-20).

பின்பு அவர் தோமாவை நோக்கி: (யோவான் 20:24-29).

தாம் ஆண்டவர் என்று இயேசு கூறியதை பரிசோதனை நிரூபிக்கிறது

ரோமர் 1:4, "பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்."
தாம் ஆண்டவர் என்று இயேசு கூறியதை பரிசோதனை நிரூபிக்கிறது. அடுத்த கேள்வி இவ்வாறு அமைகிறது:

இயேசு தமது வாகக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?
2 கொரிந்தியர 1:19-20, "தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். எஙகளால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களையெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே".

ஒரு முறை, "என் பாவங்களை மன்னித்து என்னைப் பரலோகத்திற்கு எடுத்துச்செல்பவர் யார்?" என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதற்குப் பதில் இயேசு கிறிஸ்துவிடமே காணமுடியும். எனது பாவஙகளின் தண்டனைக்கான விலையைச் செலுத்தும்படி அவரே நான் மரிக்க வேண்டிய இடத்தில் மரித்தார் (1 கொரிந்தியர 15:3-6).

நான் அவரை எனது இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக்கொண்டதிலிருந்து எனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றும் ஆண்டவரின் வாக்குறுதிகளின்படி ஆண்டவரோடு நான் ஒப்புரவாக்கப்பட்டேன் என்றும் எனக்கு நித்திய ஜீவன் உண்டு என்றும் எனக்கு உறுதி உள்ளது.

வாக்குறுதிகள் இல்லை என்றால் நம்பிக்கை இல்லை

"கிறிஸ்துவை நான் ஏப்படிஏற்றுக்கொள்வது?"என்று நீங்கள கேட்கலாம்."
http://www.sccc.org.sg/discovery/book/print/85