பைபிள்;இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா?

கேள்வி: இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா?

பதில்: நானே கடவுள் என்று இயேசு நேரடியாக சொன்னதாக பரிசுத்த வேதாகமத்தில், எந்த பகுதியிலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படியென்றால், அவர் கடவுளென்று அவர் சொல்லவில்லையென்று பொருள் படாது. உதாரணமாக (யோ. 10:30ல்) இயேசு சொல்வதைக் கவனியுங்கள். "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். இது இயேசு தம்மை கடவுள் என்று சொன்னார் என்பது போல காணப்படாமல் இருக்கிறது. ஆனால் இந்த வாக்கியத்திற்கு யூதர்களின் பிரதிபலிப்பைப் பாருங்கள், நற்கிரியைகளினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறதினாலேயே உன்மேல் கல்லெறிகிறோம்".

யூதர்கள் இயேசு தன்னை கடவுளென்று சொல்வதாக உணர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து வருகிற அந்த வசனங்களில் இயேசுகிறிஸ்து, நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லவுமில்லை. ஆகவே நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதின் மூலமாக, தான் கடவுளென்பதை இயேசுகிறிஸ்து அறிவுறுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. யோ. 8:58ல் இன்னுமொரு உதாரணத்தைப் பார்க்கிறோம். மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்கு சொல்லுகிறேன். ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்றார். இந்த இடத்திலும் யூதர்கள் இயேசுவின் மேல் கல்லெறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் கல்லெறிய முயற்சி செய்தார்கள்.

யோ. 1:1 சொல்கிறது. "அந்த வார்த்தை தேவனாயிருந்தது". யோ. 1:14ல் "அந்த வார்த்தை மாம்சமானார்" என்று குறிப்பிடுகிறது. இவைகள் இயேசுவே மாம்சத்தில் வெளிப்பட்ட கடவுள் என்பதைக் குறிப்பிடுகிறது. அப். 20:28ல் தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்து கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு என்று எழுதுகிறார். சொந்த இரத்தத்தினாலே சபையை யார் விலைக்கிரயமாக வாங்கினார்? "இயேசுகிறிஸ்து". அப். 20:28ல் தேவன் வாங்கினாரென்று அறிக்கையிடுகிறது. "ஆகவே இயேசுவே கடவுள்".

இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா "என் ஆண்டவரே! என் தேவனே" என்று யோ. 20:28 சொல்லுகிறதைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்து அந்த வார்த்தையை திருத்தவில்லை. (தீத்து 2:13) நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து வருவதற்கு காத்திருங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துகிறது (II பேதுரு 1:1). ஏபி. 1:8ல் பிதாவாகிய தேவன், இயேசுவைக் குறித்து: "தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உம்முடைய இராஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது" என்று சொல்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலனாகிய யோவானை நோக்கி, தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக என்று தேவதூதன் சொல்வதாக பார்க்கிறோம். பரிசுத்த வேதாகமத்தின் பல பகுதிகளில் இயேசுகிறிஸ்து ஆராதிக்கப்படுவதைப் பார்க்கிறோம் (மத். 2:11, 14:33, 28:9, 28:17), லூக். 24:52, யோ. 9:38). அவரை ஆராதித்ததற்காக ஒருவரையும் இயேசு கடிந்துகொள்ளவில்லை. அவர் தேவனாக இல்லாமல் இருப்பாரேயானால், தன்னை ஆராதிக்கக் கூடாதென்று ஜனங்களுக்கு சொல்லியிருப்பார். இவைகள் மட்டுமன்றி, இயேசுவின் தேவத்துவத்தைக் குறித்து, பல வேத வசனங்கள் குறிப்பிடுகிறது.

மிக முக்கியமான காரணமென்னவெனில், இயேசு தெய்வமாக இல்லாவிட்டால், அவர் தெய்வமென்று சொல்லப்படாவிட்டால், அவரது மரணம் முழு உலகத்தின் பாவத்திற்கும், விலைக் கிரயமாக செலுத்தப்பட்டிருக்க முடியாது (I யோ. 2:2). தேவன் மாத்திரமே, இப்படிப்பட்ட நித்திய விலைக்கிரயத்தை செலுத்த முடியும். தேவன் மாத்திரமே உலகத்தின் பாவத்தை சுமந்து (II கொரி. 5:21) மரித்து உயிரோடெழும்ப முடியும். அவர் பாவத்திற்குமேல், மரணத்திற்கு மேல் வெற்றி சிறந்து, தேவனாக நிருபித்தார்


http://www.gotquestions.org/Tamil/Tamil-is-Jesus-God.html