இயேசு தீபாவளி - அகத்தின் அசுரனை ( தீமையை) அழித்த கொண்டாட்டம்

இது இந்து, ஜெயின், சீக்கிய மதத்தினர் கொண்டாடும் பண்டிகை. இப்பண்டிகை 3 அல்லது 4 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். அந்நாட்களில் தீமையை நன்மை வென்றதை குறிக்க வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படும். தீபாவளி தினம் கொண்டாடத்தின் உச்சகட்டம். அன்றை தினத்தில் குடும்பமாக சேர்ந்து எண்ணெய் ஸ்நானம் செய்து, பலகாரங்களும் பரிசுகளும் பரிமாறி, அதன் பின் குடும்பமாக சேர்ந்து பட்டாசு கொளுத்துவது வழக்கம். அதுகாலையிலே வெடிவெடிக்க ஆரம்பித்து நாள்முழுவதும் தொடரும். தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தையும் குதுகூலத்தையும் சொல்லி மாளாது.

அதை அனுபவத்தவருக்கு மாத்திரம் புரியும்.நம்முடைய பாரம்பரியக் கதைகளில் நன்மை தீமையை வென்றதை குறித்து அநேக கதைகள் உண்டு. அவை பெரும்ப்பாலும் அசுரன் ( அரக்கன்) அழிவதாகவே அமையும். தீபாவளி பண்டிகை இராமர் வனவாசம் சென்று வந்ததையோ அல்லது கிருஷணன் நரகாசுரனை வென்றதையோ மையமாக வைத்து கொண்டாடப்படும். நிறைய இடங்களில் பட்டாசு வெடிகள் நிறைந்த இராவண உருவம் கொளுத்தப்பட்டு அழிக்கப்படும்.

கிழக்கத்திய மனமும் கூட இதை சித்தரிக்கும் வகையில் நமக்குள் உள்ள தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்ட தன்னைத்தானே ஆராய்ந்து பார்ப்பதை வலியுறுத்தும். நிறைய திரைப்பட கருத்துகளும், நாகரீக போதகங்களும் இராவணனை( தீமையை) ஒழித்து இராமரை (நன்மையை) நிலைநாட்டும் கருத்தை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது. கொண்டாட்டங்களை எல்லாம் ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு சற்றுநேரம் நாம் யோசிப்போம். நமக்குள் இருக்கின்ற தீமையை ஒழிக்க நாம் முயற்சித்திருக்கிறோமா?. நமக்குள் உள்ள இந்த தீமையை முற்றிலும் அழித்திருக்கிறோமா? இந்த தீமையை மேற்கொள்ள மனிதனுடைய முயற்சிகள் மாத்திரம் போதுமா?. நீங்கள் எதுவரை சென்றிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அது உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே நிர்ணயிக்கப்பட வேண்டிய காரியம். பல வருடங்களாக என்னை நானே ஆராய்ந்து சோதித்து பார்த்ததில் நான் இன்னமும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதையே உணருகிறேன். எனக்கு முன்பாக இந்த பாதையில் நடந்த ஒரு சிலரை நான் பார்த்தப்போது அவர்களும் என் நிலையில் இருந்ததையே அறிந்தேன்.

இன்றைய சரித்திரத்தில் அக தூய்மையை தேடின உன்னதமான ஒரு மனிதனை நாம் எடுத்து கொள்வோம். அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார்.. அகதூய்மை தேடி அவர் எடுத்த முயற்சிக்களுக்காக அவரை எண்ணி வியந்திருக்கிறேன். 'சத்திய சோதனை' என்னும் அவருடைய சுய சரிதையில் வழியனுப்புதல் என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதியது, " உண்மையான தூய்மை ஒருவனுக்கு வேண்டுமானால் அவன் தன் ( விருப்பங்களை தியாகம் செய்து ) எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு தன்னை எதிர்த்து நிற்கும் அன்பு மற்றும் வெறுப்பு, ஒட்டுதல் மற்றும் விடுத்தல் ஆகிய அலைகளை எதிர்த்து எழும்ப வேண்டும். இந்த முப்பரிமாண தூய்மையை நான் ஓயாமல் தொடர்ந்தாலும் அந்நிலையை நான் இன்னும் அடையவில்லை. ஆனாலும் எனக்கு முன்பாக ஒரு கடினமான பாதை உண்டு என்பதை நான் அறிவேன்".

"மகா ஆத்துமா" என்ற பட்டதை வென்ற மகாத்மா காந்தி இவ்வார்த்தைகளை சொல்வாரானால் நீங்களும் நானும் எம்மாத்திரம். உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு எதிர்பார்ப்பு உண்டு?. நமக்குள் இருக்கின்ற அசுரனனை முழுவதுமாக வீழ்த்த உங்களாலும் என்னாலும் முடியுமா? இதற்கு மாற்றுப்பதை உண்டா?. ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்குள் இருக்கின்ற அசுரனை நம்முடைய சுய பலத்தினால் அல்ல. ஆனால் கடவுளுடய பலத்தினால் வெல்ல வழி உண்டு. இந்த காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்பது தான் நமக்கு இன்றைய தீபாவளி பரிசாக அமையும். இந்த புதிரை விடுவித்து விளக்கி கொள்வோம்,

அகதீமை புறம்பானதை காட்டிலும் சிக்கலானது. நிலையான் விடுதலை வேண்டுமானால், தேவன் நம்முடைய கடந்த கால கர்மத்தில் தலையிட்டு தீமையை கண்டு தொடர்ந்து போகிற மனதை ஜெயிக்க பெலன் கொடுக்கவேண்டும். இயேசு நம்முடைய கடந்தகால தீமைக்காக தன்னை அர்ப்பணித்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மேல் சுமக்கும் போது நாம் இந்தக் கடந்த கால வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுகிறோம். இயேசு உயிர்த்தெழுந்த போது தேவனுடைய (பவித்ர ) ஆத்மா நமக்குள் வந்து தங்க செய்தார். தேவனுடைய ஆத்மா நமக்குள் தங்கி வாசம் செய்யும் போது தேவன் நமக்கு அகத்தின் குருவாக இருந்து தீமையை எல்லா சூழ்நிலையிலும் வெல்லத்தக்கதான பெலத்தை நமக்கு அளிக்கிறார். நம் அகத்தில் உள்ள குருவின் ஆலோசனைக்கு சரணடையும் போது அகத்தில் உள்ள அசுரனை எல்லா சூழ்நிலையிலும் வெற்றி கொள்கிறோம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் நுழையும் போது தீமை எல்லா சூழ்நிலையிலும் வெல்லக்கூடிய பெலத்தோடு நாம் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். தேவன் நம் மேல் எவ்வளவாய் அன்பு கூறுகிறபடியால் இந்த நாளிலும் கூட நமக்கு அகத்தில் உண்மையான தீபாவளி கொடுக்க சித்தமாயிருக்கிறார்.மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடைபெறும் தீபாவளி பண்டிகையை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லாமற் போகும்போது நித்தியத்துக்கும் நிலைக்கும் இயேசு தீபாவளியை விவரிக்க எவ்வாறு முடியும். இந்த ஞானத்தை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் இயலாமையினால்தான் தேவன் நமக்கு அவருடைய வார்த்தையை கொடுத்து "இயேசு தீபாவளி" என்று நான் உரிமையோடு சொல்லகூடிய இந்த தினத்தை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன்.

நம்மை வழி நடத்தும் பரிசுத்த ஆவிக்கு நாம் சரணடையும்போது "இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்" என்று தேவன் சொன்ன வார்த்தையை ஏற்று, தேவனுடைய ஒளி இயேசுவின் ரூபத்தில் நம் இதயங்களில் பிரகாசிப்பதை உணர முடிகிறது. தேவனுடைய இந்த பொக்கிஷமானது களிமண் பாண்டங்களில் வைக்கப்பட்டு, எல்லா வல்லமையும் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்த வைக்கிறது.

தீபாவளி பண்டிகையை இருந்து அனுபவித்து அறிந்து கொள்வது போலன்றி இயேசு தீபாவளி அனுபவிக்க இயேசவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உள்ளார்ந்தமாக இயேசுவை ( ஒளியை ) வரவேற்று, இயேசு தீபாவளியை நமக்குள் பிரகாசித்து அனுபவிக்க வேண்டும். அகதீபாவளியை பொருத்த மட்டில் நாம் எல்லோரும் களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் போல நம்மிடத்தில் சுய ஒளி இல்லாமல் இருக்கிறோம். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய ஒளியில் பிரகாசிக்கிறோம். அந்த ஒளி நம் இருதயத்தில் சுடர்விடும் போது இந்த அனுபவத்தை பெறுகிறோம். இவ்வொளி இருளிலும் பிரகாசிக்கும்.

இருள் அதனை மேற்கொள்வதில்லை.தீபாவளி நல் வாழ்த்துக்கள். எல்லோரும் வந்து அகத்தில்

உள்ள அசுரனை அழிக்க உங்களையும் அழைக்கிறோம்.