இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

ஆதாமின் பல் இதுதான்

ஆதாமின் பல்

science.jpg

நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்க்கை இயங்குகின்றது.
குடும்பத்தில் பெற்றோருக்கு இடையே இருக்கும் நம்பிக்கை வலுவான குடும்ப வாழ்க்கைக்கு அடித்தளம்.

பிள்ளைகளிடம் வைக்கும் நம்பிக்கை, வலுவான தலைமுறையின் அடித்தளம்.

இப்படியே நண்பர்களிடையே, உறவினர்களிடையே, பணியாளர்கள் இடையே என ஒவ்வோர் இடத்திலும் நம்பிக்கை வலுவடையும் போது தான் வாழ்க்கையே அர்த்தமடைகிறது.

இறை நம்பிக்கையும் அவ்வாறே.

இறைவனின் மேல் ஆழமான நம்பிக்கை வைக்காத எந்த மதமும் இருக்க முடியாது. ஏனெனில் இறைவன் என்பவர் தினசரி வாழ்க்கையில் நிரூபிக்க முடியாதவர்.

இறைவனின் இருப்பையும், அவருடைய பணிகளையும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அவர் மீதான நம்பிக்கை அவசியமாகிறது.

மின்சாரம் இருக்கின்றது என்பதை எப்படி நிரூபிப்பது ? வெளிச்சம் வருகிறது, தொலைக்காட்சி இயங்குகின்றது என விளைவுகளை வைத்தே அறிய முடியும். மற்றபடி மூன்று மீட்டர் மின்சாரத்தை எடுத்துக் காட்ட முடியாது.

காற்று இருக்கிறது என்பதை எப்படி நிரூபிப்பது ? இலைகள் அசையட்டும், இல்லையேல் காற்று முகத்தை அறையட்டும். காற்றின் இயல்பே காற்றின் இருப்பைச் சுட்டுகிறது.

கடவுளும் அப்படியே. கடவுளின் அன்பையும் அவருடைய இருப்பையும் அவர் தரும் கொடைகளை வைத்தும், சோதனைகளை வைத்துமே அறிந்து கொள்ள முடியும்.

கடவுளின் வடிவத்தைக் காண விரும்பினால் மனிதனில் காணலாம். ஏனெனில் கடவுள் மனிதனை தனது சாயலாகப் படைத்தார் என்கிறது விவிலியம்.

கடவுளுக்கு ஏதேனும் அளிக்க விரும்பினால் அதை இல்லாத, இயலாத மனிதனுக்குக் கொடுக்கலாம். ஏனெனில் "எனக்கே செய்தீர்கள்" என்கிறார் இயேசு.

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கட்டும் என்கிறது விஞ்ஞானம். கடவுள் படைத்தவற்றைக் குறித்த அறிவே இன்னும் மனிதனுக்கு வரவில்லை.

நாளொரு கண்டுபிடிப்புகள், பழையவை பொய்யாகி புதியவை உண்மை என்று சொல்லும் அறிவியல் கண்டு பிடிப்புகள்.

ஆதாமின் பல் கிடைத்தது என்று ஒரு கண்டுபிடிப்பு சொன்னது. பின் பல பத்தாண்டுகளுக்குப் பின்.. சாரி.. அது ஒரு பன்றி போன்ற விலங்கின் பல் என்றது.

ஆள்மனம், சிந்தனை, உளவியல் என்றெல்லாம் பேசும் மனிதனின் தன்னைக் குறித்த தேடல்களே இன்னும் முதல் படியைத் தாண்டவில்லை.

விஞ்ஞானம் எதைச் சொன்னாலும் நம்புகிறோம். வானத்தின் ஓர் ஓட்டை என்றாலோ, பூமியின் மையத்தில் வெப்பம் என்றாலோ  அதைக் காணாதவர்களும் நம்புகிறோம்.

நம்பிக்கையை மனிதர் மீது தான் வைக்கிறோமே தவிர இறைவன் மீது அல்ல !

இயேசு சொல்கிறார், " என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறு பெற்றவன்"

 

http://jebam.wordpress.com/2008/02/18/believe/