நித்திய வாழ்வை பெற்றுக்கொண்டாயா?

கேள்வி: நித்திய வாழ்வை பெற்றுக்கொண்டாயா?

பதில்:
வேதம் நித்திய வாழ்விற்கான பாதையை நமக்கு காட்டுகிறது முதலாவது நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்று உணர வேண்டும் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி" (ரோ. 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் நாம் செய்து நம்மீது தண்டனையை வருவித்து கொண்டோம். இதுவரை நாம் செய்த பாவங்கள் எல்லாம் நித்திய தேவனுக்கு எதிராகவும், நம்மை நித்திய தண்டனைக்கும் நடத்துகிறது. "பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ. 6:23).

என்றாலும் இயேசு கிறிஸ்து பாவமில்லாதவர் (I பேதுரு 2:22) நித்திய தேவகுமாரன் நம்முடைய பாவத்திற்க்காய் அவர் மரித்தார் நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோ. 5:8) இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காய் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பாவத்தின் மேலும் மரணத்தின் மேலும் வெற்றி சிறந்ததை நிரூபித்தார். (யோ. 19:31-42) (II கொரி. 5:21, I கொரி. 15:1-4, I பேதுரு 1:3).

தேவனை விசுவாசித்து நம்முடைய பாவத்தை விட்டு தேவனுடைய இரட்சிப்புக்கு நேராய் திரும்புவோம் (அப். 3:19). எனக்காக கிறிஸ்து சிலுவை மரத்தில் தொங்கினார் என்று விசுவாசித்து, நம்பி அவரிடம் வரும்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய வாழ்க்கை பரலோகத்தில் தொடங்கலாம். "தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்ப கூர்ந்தார். (யோ. 3:16) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ. 10:9) விசுவாசம் மாத்திரம் கிறிஸ்துவின் வேலையை சிலுவையில் முடிக்க செய்தது. நாம் நித்திய வாழ்க்கை அடைய வேண்டும் என்றால் நாமும் விசுவாச பாதையில் நம்முடைய ஓட்டத்தை துவக்க வேண்டும் (எபே.2:8-9) கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இரு தேவனுடைய ஈவு.

இயேசு கிறிஸ்த்துவை உங்கள் வாழ்வின் இரட்சகராய் ஏற்றுக்கொள்வீர்களானால் இதோ ஓர் சிறிய ஜெபம் நினைவு கொள்ளுங்கள் இந்த ஜெபமோ அல்லது வேறு ஜெபமோ உங்களை இரட்சிக்காது இது ஆண்டவருக்கு உன் விசுவாசத்தை காட்டுவதும் உன் வாழ்வில் தேவன் தந்த இரட்சிப்புக்கு நன்றி சொல்வதுமே. "தேவனே உமக்கு விரோதமாய் பாவம் செய்து தண்டனை வருவித்துக்கொண்டேன். ஆனால் என்னுடைய பாவத்திற்கான தண்டனையை கிறிஸ்துவின் மூலம் நீர் ஏற்றுக்கொண்டு எனக்கு மன்னிப்பு நல்கினீரே உமக்கு நன்றி. தேவனே, நான் என் பாவத்தைவிட்டு திரும்பி உம்முடைய இரட்சிப்பை நம்பி இருக்கிறேன். உம்முடைய அதிசயமான கிருபைகளுக்கும், மன்னிப்புக்கும் மற்றும் வெகுமதியாய் கொடுத்த நித்திய வாழ்க்கைக்கும் நன்றி தேவனே ஆமென்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள "நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

 

http://www.gotquestions.org/Tamil/Tamil-eternal-life.html