இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

தேவனிடம் இருந்து மன்னிப்பு பெறுவது எப்படி?

தேவனிடம் இருந்து மன்னிப்பு பெறுவது எப்படி?கேள்வி: தேவனிடம் இருந்து மன்னிப்பு பெறுவது எப்படி?

பதில்:
அப் 13:38 சொல்கிறது "ஆதலால் சகோதரரே இவர்(இயேசு) மூலமாய் உங்களுக்கு பாவமன்னிப்பு உண்டாகும்.

மன்னிப்பு என்றால் என்ன? அது ஏன் எனக்கு?

மன்னிப்பு என்றால் பலகையை சுத்தமாக அழித்தல், பொறுத்துக்கொள்ளுதல் என்று அர்த்தம் யாதொருவனுக்கு நாம் தவறு இழைத்திருந்தால் அவனுடனான நல் உறவில் நிலைத்திருக்க அவனிடம் மன்னிப்பு எதிர்பார்க்கிறோம். மன்னிப்பு கொடுக்கப்படவேண்டியதல்ல, ஏனென்றால் மன்னிக்கப்படுகிறவன் அதற்கு உரியவன். ஏந்த மனிதனும் மன்னிப்புக்கு உரியவர்கள் அல்ல. மன்னிப்பு ஒரு அன்பின் செயல், இரக்கம், கிருபை. மன்னிப்பு என்பது பிறருக்கு விரோதமாய் ஏதோ மனதில் வைத்து கொண்டு வழங்கப்படுவதல்ல. நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பு பெற வேண்டும் என்று வேதம் சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம் பிர.7:20 "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை. I யோ. 1:8 சொல்கிறது. "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம்" அடிப்படையில் எந்த ஒரு பாவமும் கர்த்தருக்கு விரோதமான செயலாயிருக்கிறது (சங். 51:4) நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையென்றால் நம்முடைய நித்தியத்தை கஷ்டங்களோடும் பாவத்தின் வினையினால் வரும் பலன்களோடும் கழிக்க வேண்டியதாயிருக்கும் (மத். 25:46, யோ. 3:36).

மன்னிப்பு நான் எப்படி பெற்றுக்கொள்வது?

தேவன் இரக்கமுள்ளவர், நம் பாவங்களை மன்னிக்க வாஞ்சையுடன் இருக்கிறார் (II பேதுரு 3:9) சொல்கிறது எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (ரோ. 6:23) பாவத்தின் சம்பளம் மரணம், நம்முடைய சொந்த பாவத்தினால் நித்திய மரணத்தை சம்பாதித்தோம். ஆனால் தேவன் தன்னுடைய அனாதி தீர்மனத்தின்படி தன் சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி நாம் செய்த பாவங்களுக்கு தண்டனையாக சிலுவை மரத்தில் மரிக்க ஒப்புக்கொடுத்தார் (II கொரி.5:21) பாவமறியாத இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காய் சிலுவையில் பலியாகி, முழு உலகத்திற்கும் பாவமன்னிப்பளித்தார்.

(I யோ. 2:2) சொல்கிறது "நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" அவர் உயிரோடு எழுந்ததின் மூலம் பாவத்தின் மேலும், மரணத்தின் மேலும் வெற்றி பெற்றார் (I கொரி.15:1-28) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலின் மூலம் (ரோ. 6:23.) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வெகு உண்மையாயிருக்கிறது" தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? பாவமன்னிப்பு தரக்கூடிய இரட்சகராகிய கிறிஸ்துவின் மேல் உங்கள் விசுவாசத்தை வையுங்கள். எபே. 1:7 சொல்கிறது கிறிஸ்துவின் இரத்தத்தில் நமக்கு விடுதலையுண்டு. பாவத்திலிருந்து மன்னிப்பு உண்டு. நாம் செய்ய வேண்டியது இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காய் மரித்தார் என்று உணர்ந்து விசுவாசித்து நம்முடைய பாவங்களை அவரிடம் அறிக்கை செய்தால் அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார்.

மன்னிப்பு சுலபமானதா?

ஆம்! மன்னிப்பு சுலபமானதே! உன்னுடைய மன்னிப்பிற்கு நீ தேவனிடம் கிரயம் ஒன்றும் செலுத்த வேண்டாம். கிறிஸ்துவை விசுவாசித்து உன் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வாயானால் தேவனுடைய கிருபையினால், அவருடைய இரக்கத்தை கொண்டு மன்னிக்கப்படுவாய். கிறிஸ்துவை விசுவாசித்து உன் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வாயானால் தேவனுடைய கிருயையினால், அவருடைய இரக்கத்தை கொண்டு மன்னிக்கப்படுவாய். கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கிற நம்பிக்கையினால் மாத்திரம் உன் வாழ்வில் மன்னிப்பு பெற்றுகொள்ள முடியும். உனக்கு மன்னிப்பு நல்கினதான தேவனுக்கு நன்றி செலுத்தி இந்த சிறிய ஜெபத்தை ஏறெடுப்பாயா "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்து தண்டனையை அனுபவித்து எனக்கு பாவமன்னிப்பு அளித்தீரே, இரட்சிப்பு ஈந்தீரே உம்முடைய அதிசயமான கிருபைக்கு, மன்னிப்புக்கு நன்றி கர்த்தாவே! ஆமென்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள "நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://www.gotquestions.org/Tamil/Tamil-got-forgiveness.html