உலக இரட்சகரான இயேசு உண்மையாகவே வாக்களிக்கப்பட்ட மேசியாவா?அதிசய கண்டுபிடிப்பு

அறிமுகம்

ஏன் இயேசுவைக் குறித்து கவலைகொள்ள வேண்டும்? அவருடைய பிறப்பு, அவருடைய வாழ்வு, அவர் செய்த அற்புதங்கள், அவருடைய வசனங்கள், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் அனைத்துமே இதுவரை உயிர் வாழ்ந்த மற்ற அனைவரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

தீர்க்கதரிசனங்களின் நோக்கங்கள்:

வேதத்திலுள்ள தீர்க்கதரிசன செய்திகள் நாம் ஆச்சரியத்துக்குள்ளாகாமல் இருக்கவும் சந்தேகப்படாமல் இருக்கவும் வழங்கப்பட்டுள்ளன. இயேசு சொன்னார், "இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்" (யோவான் 14:29).

பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசினங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டில் நிறைவேறியதை ஒப்பிடும்போது அது யார் மேசியா என்பதை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

(ஆண்டவரிடமிருந்து வரும் ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் நிறைவேறவேண்டும் ஏனெனில் ஆண்டவர் பொய் சொல்வதில்லை. ஜோசியம் பார்த்தல் மனிதனிடம் இருந்து வருவதால் அது நிறைவேறுவது என்பது அதிர்ஷ்டத்தைச் சார்ந்துள்ளது.)

இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, மேசியாவைப் பற்றிய மூன்றுதீர்க்கதரிசனங்களை நாம் கண்ணோட்டமிடுவோமாக.

 

தீர்க்கதரிசனங்களும் அவை நிறைவேறுதலும்

 

    • தீர்க்கதரிசனம் 1:
      • மேசியாவைப் பற்றி சாட்சிக் கூறுவதற்கு அவருக்கு முன்னோடியாக வருகிற தூதுவர் (750 கி.மு.). (ஏசாயா 40:3-5)

      • அறிவிப்பு: (நிறைவேறுதலுக்கு முன்பு): தூதுவரின் அதிசயமான கருவுருதல்.(1 கி.மு.)

        சகரியா என்னும் ஆசாரியன் ஆலயத்தில் தூபங்காட்டுகிறபோது கர்த்தருடைய தூதன் ஒருவன் (லூக்கா 1:11-23)

      • நிறைவேறுதல்: தூதுவரின் பிறப்பு (1 கி.மு.).

        எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். (லூக்கா 1:57-66)

        : யோவானின் செய்தி: "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் ... என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்," (ஏசாயா 40:3-5).

        யோர்தான் நதியில் நிறைய ஜனங்கள் யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசுவும் யோவானால் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல ரூபங்கொண்டு அவர்மேல் (இயேசு) இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: "நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்"; என்று உரைத்தது. (லூக்கா 3:21-22) தேவன் இயேசுவைத் தமது நேச குமாரன் என்று அறிவித்தபோது யோவான் அங்கு ஒரு சாட்சியாக நின்றார். இது தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது.

    •  

       

       

      1. தீர்க்கதரிசனம் 2
      1. மேசியாவின் பிறந்த இடம்:

        மேசியாவின் பிறப்புக்கு நூறாண்டுகளுக்கு முன்பே அவர் எங்கு பிறப்பார் என்பதை மீகா தீர்க்கதரிசி எழுதினார் (750 கி.மு) (மீகா 5:2). மேசியா பிறக்கும் சரியான இடத்தை இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறது.

      2. அறிவிப்பு: குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது (லூக்கா 2:1-3)(2 கி.மு).

      3. நிறைவேறுதல்: மரியாளும் யோசேப்பும் குடிமதிப்பு கட்டளையின்படி எழுதினர் (1 கி.பி.) (லூக்கா 2:4-5).

     

    • தீர்க்கதரிசனம் 3:
      • மேசியாவின் கன்னிப் பிறப்பு, அவராக இருப்பவரை கண்டுகொள்ளக்கூடிய அதிசயமான அடையாளம் (கி.மு.750).

        வாக்களிக்கப்பட்ட மேசியாவின் பிறப்புக்கு 750 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசி ஆண்டவரின் ஏவுதலின்படி இவ்வரிகளை எழுதினார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் விவரமாவது (ஏசாயா 7:14).

      • அறிவிப்பு: (பிறப்புக்கு முன்பு) மேசியாவின் கருத்தரிப்பு (மத்தேயு 1:18-25) (1 கி.மு.).

      • நிறைவேறுதல்: மேசியாவின் பிறப்பு (லூக்கா 2:6-7, மத்தேயு 1:25) (1 AD).

    தீர்க்கதரிசனம் 1, மேசியா பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தூதுவர் யோவான், பிறந்தபோது நிறைவேறியது (லூக்கா 1:36-45).

    [picture]

     

     

     

     

    தீர்க்கதரிசனம் 2-ம் 3-ம், கன்னி மரியாள் பெத்லகேமில் ஒரு குமாரனை ஈன்றபோதும், ஆண்டவரின் கட்டளையின்படி அவருக்கு இயேசு என்று பெயரிட்டபோதும் ஒரே சமயத்தில் நிறைவேறின. இது அதிசயமும் சிறிதும் நம்ப முடியாததுமாய் இருக்கிறது! ஆனால் ஆண்டவரால் கூடாதது ஒன்றுமில்லை! இன்னும் அதிக செய்திகள் அறிவதற்கு மத்தேயுவின் சுவிசேஷத்தைப் படியுங்கள்

     

     

     

    1. இயேசு செய்த அற்புதங்கள்:
    1. அவரே மேசியா என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றன.
    2. (லூக்கா 7:18-22)
    3. (மந்திரவித்தைகள் மனித சாகசங்களால் செய்யப்படுகின்றன. அற்புதங்கள் ஆண்டவரின் மகத்துவமான வல்லமையினால் செய்யப்படுகின்றன.) சிலவற்றைக் கூறுவோமானால்,
    1. இந்த அற்புதங்களைக் கண்டவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே!"

     

     

    3,உயிர்த்தெழுதல்: இயேசு மரணத்தின் மேல் அதிகாரம் உள்ளவர் என்பதை அவருடைய உயிர்த்தெழுதல் உறுதிசெய்கிறது.

    (மத்தேயு 28:5-6.)

    அருமை நண்பரே, இயேசு, தாமே வாக்களிக்கப்பட்ட மேசியாவும் உலக இரட்சகரும் என்பதை சிறிதளவும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துவிட்டார். "..தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே இயேசு தேவகுமாரனுமாயிருக்கிறார்" (ரோமர் 1:4)

    என்றும் மேலும் அவர் கூறியுள்ளார். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6)

    "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." (யோவான் 1:12)

    இப்போதும் நாம் அவரை ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது நமது முடிவில் உள்ளது?

      http://sank.sccc.org.sg/discovery2-tam.php?page=6