காலம் காலமாக கிறிஸ்தவர்களின் முகம் நோக்கி நீட்டப்படும் ஒரு கேள்வி இது தான். இயேசு கடவுளா ? வெறும் செய்தியாளனா ?
'வெறும் செய்தியாளன் என்றால், ஏன் கிறிஸ்தவம் அவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு காந்தியோ, ஒரு விவேகானந்தரோ கூட செய்தி சொல்லிக் கடந்து போனவர்கள் தானே ? அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் படவில்லையே ? இந்தக் கேள்விக்கு கிறிஸ்தவம் பல்வேறு சூழல்களில் பதிலளித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்னும் அந்தக் கேள்விகள் நீர்த்துப் போய்விடவில்லை.
இந்தக்
கேள்விகள் இன்று நேற்று முளைத்தவையல்ல. இயேசு இந்த பூமியில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதே எழுந்த கேள்விகள் தான். அவருடைய சமகால மக்கள் அவரை மூன்று விதமாகப் பார்த்தார்கள். பொய்யன், பைத்தியக் காரன், கடவுள் !முதலில்
இயேசு தான் கடவுள் என்பதைச் சொல்லியிருக்கிறாரா என்று விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், பல இடங்களில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பதைக் காணமுடியும்.யோவான்
நற்செய்தியாளர் (10:27-30 ) இதை மிகவும் தெள்ளத் தெளிவாக இயேசுவின் வார்த்தைகள் மூலமாக விளக்குகிறார். " ஆடுகள் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றன, நான் அவற்றுக்கு நிறை வாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா.'அவற்றை என்கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர். நானும் என் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" இயேசுவின் இந்த வெளிப்படுத்துதல் யூதர்களை ஆவேசத்திற்கு உட்படுத்தியது ! " மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொண்டாய்" என்று அவர்மேல் கல்லெறியப் பார்க்கிறார்கள்.
இயேசுவை
"பொய்யன்" என்று யூதர்கள் சொல்லும் வார்த்தையிலேயே இயேசு தன்னை இறைமகனாகக் காட்டிக் கொண்டார் என்பது விளங்குகிறது அல்லவா ? மேலும், எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்று எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டெடுக்கவில்லை.'யூத வரலாற்றிலேயே இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்னும் செய்தி பிலாத்துவின் வாழ்க்கைக் குறிப்பேடுகளில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது ஒன்றே இயேசு தன்னை கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்பதற்குப் போதுமானது. இருந்தாலும் விவிலியம் முழுக்க அதற்கான ஆதாரங்கள் நிறையவே !
இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றும், யோவான் நற்செய்தி இயேசுவைக் கடவுளாகக் காட்டுவதற்காக சேர்க்கப் பட்டுள்ள பிற்சேர்க்கை என்றும் சொல்பவர்கள் விவிலியத்தை ஆழமாய் வாசித்ததில்லை என்பதே பொருள்.
'மத்தேயு 26: 63-65, மார்க் 14 :60 - 62, லூக்கா 22:67-70 இந்த மூன்று நற்செய்தியாளர்களுமே ஒரு மிக முக்கியமான சான்றை முரணில்லாமல் சொல்கிறார்கள். இயேசு பிடிக்கப் பட்டு தலைமைக் குருவின் முன்னால் நிறுத்தப் படும்போது தலைமைக் குரு வினவுகிறார் " போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீர் தானா ?" அதற்கு இயேசு " நானே அவர் !" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் !.
'யோவான், இயேசுவோடான பிலாத்துவின் உரையாடல் மூலமாக இயேசு தன்னை விண்ணக அரசராகக் காட்டிக் கொண்டதைக் குறிப்பிடுகிறார். மத்தேயு, மார்க் , லூக்கா மூன்று நற்செய்திகளும் இயேசு வாழ்ந்த நூற்றாண்டில் எழுதி முடிக்கப்பட்டவை என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆளுநர்களுக்கு முன்பாகவும், அரசனுக்கு முன்பாகவும் சித்திரவதை செய்யப்பட்டும், இரத்தம் சிந்தியும் சாவுக்கு சமீபமாக இருக்கும் ஒரு மனிதன், இறுதிவரை ஒரே விஷயத்தைச் சொல்கிறான் என்றால் ஒன்று, அவன் பைத்தியக் காரனாக இருக்க வேண்டும், அல்லது அந்தச் செய்தி எதனாலும் அழிக்க முடியாத உண்மையாக இருக்கவேண்டும்.
'இயேசுவின் தெளிவான போதனைகளும், வழிகாட்டல்களும், திட்டங்களும் அவரை பைத்தியக்காரன் என்பவரைத் தான் பரிதாபத்தோடு பார்க்க வைக்கும். யோவான் 10:21 ல், மக்களே சொல்கிறார்கள் "பேய்பிடித்தவன் பேச்சு இப்படியா இருக்கும் ? பேய் பிடித்தவனால் அற்புதங்கள் செய்ய இயலுமா ?". அப்படிப் பார்க்கும் போது இயேசு உண்மையைத் தான் சொன்னார் என்பது உறுதிப் படுகிறது இல்லையா ?
யோவான்
நற்செய்தியில் இயேசு தன்னை நல்லாயனாகக் காட்டிக் கொள்கிறார். தன் வழியே வருவோருக்கு மீட்பு என்கிறார். வாழ்வின் வாசல் நானே என்கிறார். நானும் தந்தையும் ஒன்றே என்கிறார்.'அவர் தன்னுடைய புத்தகத்தில் 4:25-26 இல் சமாரியப் பெண் ஒருத்தியிடம் தன்னைக் கடவுளாக வெளிப்படுத்துகிறதைக் குறிப்பிடுகிறார். புற இனத்தாரோடு எந்தவித சகவாசமும் வைக்காத ஒரு சமாரியப் பெண்ணைக் குறித்த செய்திகளை சம்பந்தமே இல்லாத ஒரு யூதர் எடுத்துக் கூறிய அற்புதத்தின் மூலம் இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார்.
ஓய்வு
நாளில் வேலை செய்யக் கூடாது என்னும் நிலையை மாற்றியவர் இயேசு. ஓய்வு நாளில் நல்லது செய்யலாம் தப்பில்லை ! "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், எனவே நானும் செயலாற்றுகிறேன் !" என்று அற்புதங்கள் செய்கிறார்..கடவுளுக்குரிய நாளில் கடவுளுக்குரிய காரியங்களை கடவுளே ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி தான் அது. ஓய்வு நாளை கடைபிடிக்காதவனை கொடூரமாய் தண்டிக்கும் அந்தக் காலத்தில் இயேசுவின் இந்த செயல்பாடுகள் இறை அருள் இல்லாத ஒருவரால் நிச்சயமாகச் செய்ய இயலாது.
.மேலும் அவர் விண்ணகத் தந்தையை " நம் தந்தை" என்று அழைக்காமல் " என் தந்தை" என்று அழைப்பதன் மூலமாகவும் தனக்கும் தந்தைக்கும் இடையே உள்ள "ஒன்றித்த" நிலையை வெளிப்படுத்துகிறார்.
"நான் தந்தையிடமிருந்து வந்தேன், தந்தையிடமே செல்கிறேன்" என்னும் இயேசுவின் வார்த்தைகள் (யோவான் ) இயேசு பிறக்கும் முன்பே இருந்தவர் என்பதும் மண்ணில் அவர் வந்தது தன் தந்தையின் பணியை மண்ணிற்கு உணர்த்தவுமே என்பதை வெளிப்படுத்துகின்றன.
பாவங்களை
மன்னிக்கும் அதிகாரம் தனக்கு தந்தையால் வழங்கப்பட்டிருக்கிறது என்னும் இயேசுவின் மொழிகள் அவரை கடவுளாகக் காட்டுபவையே !யாத்திராகமத்தில்
(3) கடவுள் மோயீசனிடம் தன் பெயர் "இருக்கிறவர் நானே" ( யாவே ) என்கிறார். யோவான் 8:58, ஆபிராகாமுக்கு முன்பே இருக்கிறவர் நானே… என்கிறார்.வழியும்
உண்மையும் வாழ்வும் நானே, என்வழியாய் அன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை ( யோவான் 14:6)விவிலியத்தில்
இப்படியாக குறைந்த பட்சம் 83 இடங்களில் இயேசு கடவுள் என்பதற்கான ஆதாரக் கூற்றுகள் இருப்பதாக விவிலிய ஆராய்ச்சியாளர்கள் கூறுனின்றனர்.இவையனைத்தும் இயேசு கடவுளின் மகன். வல்லமையுள்ள கடவுள் என்பதை விளக்குகின்றன. இது ஒரு சின்ன விளக்கம் மட்டுமே. விவிலியத்திலிருந்து ஒரு மிகப் பெரிய நூல் எழுதுமளவுக்கு ஆதாரங்களை அளிக்க முடியும்.
இப்போது
இன்னோர் கேள்வி உங்கள் முன் எழலாம். இயேசுவின் கூற்றுகள் உண்மையா ?அதற்கு
எளிமையான ஒரு பதில் சொல்லப் படவேண்டுமானால் இயேசுவின் காலத்தில் இயேசு செய்த அருங்குறிகள், அற்புதங்கள் மட்டுமே போதுமானவை. இறந்த மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்த நிகழ்ச்சியே பல்வேறு நிகழ்வுகள், நற்செய்திகள் மூலமாக விளக்கப்படுள்ளன. இயேசு உயிர்த்தபின் அவரை குறைந்தபட்சம் 500 பேர் பார்த்திருக்கிறார்கள். இதைவிட மேலான ஆதாரம் எதற்கு?' இயேசுவை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
நம்பினால் வாழ்வில் வரும் நல்லதொரு திருப்பம்.'
http://jebam.wordpress.com/2008/04/18/jesus_god/