காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

பரிசுத்த வேதாகமத்தில் இப்படியாக ஒரு வாக்கியம் வரும். அதாவது உலகின் இறுதிகாலங்களில் தனது வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ ஒரு குறிப்பிட்ட முத்திரையில்லாதவன் வாங்கவும் விற்கவும் இயலாது என்பதாகும்.இன்றைக்கு உங்களிடம் கைநிறைய கரன்சிநோட்டுகள் இருக்கிறது.அதை யாரிடமும் கொடுத்து பொருள் வாங்கலாம், விற்கலாம். ஆனால் மேலைநாடுகளில் பெரும்பாலான வாங்கல்கள் விற்கல்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலமாகவே நடக்கின்றன.அதாவது அங்கே கரன்சிநோட்டுகளுக்கு வேலையில்லை. அந்த கிரெடிட் கார்டையே ஒரு சிப் வடிவில் உங்கள் வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ செருகிவிட்டு விட்டால் அப்புறம் கைவீசிக்கொண்டு கடைவீதி போகலாமே. அது தான் நடக்கப்போகின்றது.

இது சாத்தியமா என்றால் இன்றைய விஞ்ஞானம் அது சாத்தியமே என்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.நாம் ஏற்கனவே இங்கு கூறியுள்ளபடி Radio-frequency identification (RFID) எனப்படும் மைக்ரோசிப்கள் இதற்காக பயன்படுத்தப்படும்.

டாலரை வீழ்த்திவிட்டு வீறுகொண்டெழுந்து கொண்டிருக்கும் யூரோ கரன்சியை அதிவிரைவில் அதாவது 2010-க்குள் "Cashless"-ஆக்க EAPS (Euro Alliance of Payment Schemes) மற்றும் SEPA (Single Euro Payment Area) எனும் ஐரோப்பிய ஸ்தாபனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அதாவது கூடிய விரைவில் காகித யூரோ கரன்சிகள் முற்றிலுமாக பயன்படுத்தப்படமாட்டாது.அதற்கு பதில் கிரெடிட்கார்டு போன்ற ஒரு கார்டு தான் பயன்படுத்தப்படும். அது அந்திகிறிஸ்துவின் காலத்தில் வலதுகை முத்திரையாகவோ அல்லது நெற்றியில் முத்திரையாகவோ மாறி விடும்.அது இருந்தால் தான் வாங்கவோ விற்கவோ முடியும் என்றாகிவிடும்.

ஏற்கனவே நாம் சொல்லியிருக்கிறபடி படிப்படியாக யூரோ நாணயம் ஒழிந்து உலக அளவில் ஒரே நாணயம் வந்துவிடும். அப்போது உலக அளவில் எல்லோருமே வாங்கவும் விற்கவும் இதுமாதிரி வலதுகை அல்லது நெற்றி முத்திரை அணிந்திருக்கவேண்டிவரும்.

மாரநாதா.

வெளி:13:16,17,18
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய
இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

http://www.thewayofsalvation.org/2008/04/blog-post.html