இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

திருமண அழைப்பு

திருமண அழைப்பு

       கிறிஸ்துவுக்குள் பிரியமான இணையதள நண்பர்களே பெயர் அறியப்படாத நண்பர் ஒருவர் இன்னொருவர் சார்பாக நம்மெல்லாருக்கும் ஒரு திருமண அழைப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.தயவு செய்து எல்லாரும் எப்படியாவது வந்து திருமணத்தில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.அழைப்பிதழ் அனுப்பிய நண்பருக்கு நன்றி.(அவர் விரும்பினால் அவரின் பெயர் வெளியிடப்படும்).தேவனுக்கே மகிமை.
 


திருமண அழைப்பு

ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் வந்தது. அவருடைய மனையவி தன்னை ஆயத்தம் பண்ணிணாள் (வெளி19.7)

தேவன்புடையீர்!
 

வானாதி வானங்கள் கொள்ளாத தேவாதி தேவனின் அநாதி தீர்மானத்தின்படி நிகழும் எதிர்பார்த்திராத ஆண்டு, யோசித்திராத மாதம், நினையாத நாளில், மகிழ்ச்சி வேளையில்

**************************************************
தேவ‌னின் திருப்புத‌ல்வ‌ன்             இர‌த்த‌த்தால் மீட்க‌ப்ப‌ட்ட‌
  திருநிறைச்செல்வ‌ன்                     திருநிறைச்செல்வி

   இயேசுகிறிஸ்து                           திருச்ச‌பை

**************************************************
 

ஆகியோருக்கு பிதாவாகிய‌ தேவ‌ன், குமார‌னாகிய‌ தேவ‌ன், ப‌ரிசுத்த‌ ஆவியாகிய‌ தேவ‌னாகிய‌ பெரியோர்க‌ளால் கல்வாரி மலையில் நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ப்ப‌டி ம‌த்திய‌ ஆகாய‌த்தில், தூத‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ரிசுத்த‌ விவாக‌மும், அத‌ன்பின்ன‌ர் ப‌ர‌லோக‌த்தில் விருந்து உப‌சார‌மும் ந‌டைபெறும். தாங்க‌ள் த‌ங்க‌ள் குடும்பதாருடனும்,சுற்ற‌த்தாருட‌னும், ந‌ண்ப‌ர்க‌ளுட‌னும் கிறிஸ்துவை இத‌யத்தில் ஏற்று, இணையில்லா ச‌மாதான‌ம் பெற்று, ச‌பையாம் ம‌ண‌வாட்டியாக‌ விவாக‌த்திலும்,            விருந்திலும் க‌ல‌ந்து கொண்டு உச்சித தேவாசிர்வாத‌மும், நித்திய‌ பேரின்ப‌ வாழ்வும் பெற‌ அன்புட‌ன் அழைக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்.

 
அழைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் பாக்கிய‌வான்க‌ள் வெளி19.9
ஆய‌த்த‌மாகிடுவோர் ஆன‌ந்த‌ம‌டைந்திடுவார்!

இருத‌யக் க‌த‌வைத் த‌ட்டி அ‌ழைக்கும்
தேவ‌ ஆவியான‌வ‌ர்


பின்குறிப்பு: இந்த திருமணத்தில் நீங்கள் பார்வையாளர்களாகவோ அல்லது வாழ்த்துபவர்களாகவோ இல்லாமல் தூதர்களால் வாழ்த்தப்படுபவர்களாக இருக்கவேண்டும் என்பதே என் அவா!