இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

நான் ஒரு முஸ்லீம், நான் கிறிஸ்தவனாவதற்கு ஏன் கருத வேண்டும்?


கேள்வி: நான் ஒரு முஸ்லீம், நான் கிறிஸ்தவனாவதற்கு ஏன் கருத வேண்டும்?

பதில்:
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் உறவுமுறையில் மிகவும் விரும்பக்கூடிய அம்சம் என்னவென்றால், இயேசுவைப்பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்பதாகும். அல்லா இயேசுவை அனுப்பியதாகவும், மற்றும் பரிசுத்த ஆவியினால் அவருக்கு உதவி செய்ததாகவும் ( சூரா 2:87), அல்லா இயேசுவிற்கு உயர்வு அளித்ததாகவும் (சூரா 2:253), இயேசு நீதிமானாகவும் மற்றும் பாவமில்லாதவராக இருந்ததாகவும் ( சூரா 3:46; 6:85; 19:19), இயேசு மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்ததாகவும் ( சூரா 19:33-34), இயேசுவை ஒரு மதத்தை ஸ்தாபிக்க அல்லா கட்டளையிட்டதாகவும் (சூரா 42:13) மற்றும் இயேசு பரலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) ஏறிச் சென்றதாகவும்( சூரா 4:157-158) குர்ஆன் சொல்கிறது. இதன் விளைவாக, நம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் இயேசுவின் போதனைகளைத் தெரிந்துக்கொள்ளவேண்டும் மற்றும் அவைகளுக்கு கீழ்படிய வேண்டும் ( சூரா 3:48-49; 5:46).

இயேசுவின் போதனைகள் அவரின் சீடர்களால் மிகவும் விவரமாக நற்செய்தி நூல்களில் ( Gospel ) அல்லது இன்ஜிலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. சீடர்கள் இயேசுவையும் அவருடைய போதனைகளை நம்புவதற்கும் அல்லா ஊந்துதல் (inspire) கொடுத்தார் என்று குர்ஆன் 5:111 சொல்கிறது. இயேசுவும் அவருடைய சீடர்களும் அல்லாவின் உதவியாளர்கள் என்று குர்ஆன் 61:6,14 அடையாள்ம் காட்டுகிறது. அல்லாவின் உதவியாளர்களாக இயேசுவின் சீடர்கள் அவருடைய போதனைகளைச் சரியாக பதிவுச் செய்து இருப்பார்கள். தோராவையும் (Tora) மற்றும் இன்ஜிலையும் (Gospel) நிலைநிறுத்தும் படியாகவும் மற்றும் கீழ்படிய வேண்டுமென்றும் குர்ஆன் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறது ( சூரா 5:44-48). இயேசு பாவம் செய்யாதவராக இருப்பாரானால், அவர் கற்றுக் கொடுத்ததெல்லாம் முழுவதும் உண்மையாக இருக்கும். இயேசுவின் சீடர்கள் அல்லாவின் உதவியாளர்களாக இருந்திருப்பார்களானால், அவர்கள் இயேசுவின் போதனைகளைச் சரியாக பதிவுச் செய்து இருப்பார்கள்.

முகமதுவின் மூலமாக, குர்ஆனிலே அல்லா முஸ்லீம்கள் அனைவரும் இன்ஜிலை( Gospel ) படிக்க வேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார். இன்ஜில் திருத்தப்பட்டு இருந்திருக்குமானால், அல்லா இப்படிப்பட்ட கட்டளையை கொடுத்து இருக்கமாட்டார். ஆகையால், முகமதுவின் காலத்தில் இருந்த இன்ஜிலின் பிரதிகள் நம்பகத்தன்மை உடையதாகவும், மற்றும் சரியானதாகவும் (பிழையில்லாததாகவும்) இருந்திருக்கிறது. முகமதுவின் காலத்திற்கு 450 ஆண்டுகளுக்கு முன்புள்ள இன்ஜிலின் பிரதிகள் இருக்கின்றன. பல ஆயிரக்கணக்கான இன்ஜிலின் கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன. மிகப்பழமையான பிரதிகளாகிய முகமதுவின் காலத்தில் இருந்த பிரதிகளையும் , அவருடைய காலத்திற்கு பிற்பட்ட காலத்தின் பிரதிகளையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது , இன்ஜிலின் எல்லா பிரதிகளும் இயேசுவைப் பற்றியும், அவருடைய போதனைகளைப் பற்றியும் அவைகள் சொல்லுவது மிகவும் தெளிவாகவும் , முரணில்லாததாகவும் உள்ளது. உண்மையாக இன்ஜில் திருத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால், இயேசுவின் போதனைகள் அனைத்தும் உண்மை என்றும், அவருடைய போதனைகள் இன்ஜிலில் சரியாக பதிவுச் செய்யப்பட்டதென்றும் மற்றும் அல்லா இன்ஜிலை சரியாக பாதுகாத்தார் எனவும் நாம் நம்பிக்கையோடு தெரிந்துக்கொள்ள முடியும்.

இயேசுவைப்பற்றி இன்ஜிலில் பதிவுச் செய்யப்பட்ட சில விவரங்கள் என்ன ? யோவான் 14:6 ல் இயேசு "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று சொல்லியிருக்கிறார். இறைவனிடம் செல்வதற்கு தான் மட்டுமே வழி என்று இயேசு போதித்தார். மத்தேயு 20:19 ல் இயேசு தான் சிலுவையில் அறையப்படப்போவதாகவும், மரிக்கப்போவதாகவும் மற்றும் மூன்றாம் நாளில் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்திருக்கப் போவதாகவும் சொன்னார். இயேசு எப்படி முன்னறிவித்தாரோ அதே போல் நடந்ததாக இன்ஜிலில் விவரமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது ( மத்தேயு அதிகாரங்கள் 27-28, மாற்கு அதிகாரங்கள் 15-16, லூக்கா அதிகாரங்கள் 23-24, யோவான் அதிகாரங்கள் 19-21). ஏன் அல்லாவின் மிகப்பெரிய தீர்க்கதரிசியாகிய (நபியாகிய) இயேசு தன்னைத்தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்? அல்லா இதனை ஏன் அனுமதித்தார்? நீங்கள் உங்கள் நண்பனுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட பெரிய அன்பு வேறு இல்லை என்று இயேசு சொன்னார் (யோவான் 15:13). இறைவன் நம்மீது எவ்வளவு அன்பு கூர்ந்தார் என்றால், இயேசுவையே நமக்காக தியாக பலியாக அனுப்பினார் என்று யோவான் 3:16 சொல்கிறது.

இயேசு நமக்காக தன்னுடைய உயிரை ஏன் தியாகம் செய்யவேண்டும்? இது தான் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம். நம்முடைய தீயச் செயல்களை விட நல்ல செயல்கள் அதிகமாக உள்ளனவா இல்லையா என்பதைப்பார்த்து அல்லா நியாயம் தீர்ப்பார் என்று இஸ்லாம் போதிக்கிறது. எந்த ஒரு மனிதனும் தன்னுடைய நல்ல செயல்கள் மூலமாக தன்னுடைய தீயச் செயல்களை மேற்கொள்ள முடியாது என்று கிறிஸ்தவம் போதிக்கிறது. ஒரு வேளை நல்ல செயல்கள் மூலமாக தீயச் செயல்களை மேற்கொண்டாலும், அல்லா எவ்வளவு பரிசுத்தர் என்றால், எவனாவது ஒரே ஒரு முறை மட்டுமே பாவம் செய்தவனாக இருந்தாலும் , அல்லா அவனை சொர்க்கத்தில் அனுமதிக்கமாட்டார். அல்லா பரிபூரணமுள்ளவரும் மற்றும் பரிசுத்தராகவும் இருப்பதினால், குறையுள்ள எதையும் சொர்க்கத்தில் அனுமதிக்கமாட்டார். இது நம் எல்லாரையும் நம் நித்தியத்தை நரகத்தில் கழிக்க வழி வகுக்கிறது. அல்லாவுடைய பரிசுத்தம் பாவத்திற்கு நித்திய தண்டனையைக் கேட்கிறது. இதற்காகத் தான் இயேசு நம்முடைய தியாக பலியானார்.

இயேசு பாவமில்லாதவராக இருந்தார் என்று குர்ஆன் போதிக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு முறைகூட பாவம் செய்யாமல் எப்படி வாழமுடியும்? இது முடியவே முடியாது. அப்படியானால் இயேசு இதை எப்படி செய்துமுடித்தார்? இயேசு மனித தன�����மைக்கு அப்பார்ப்பட்டவர் (மேற்பட்டவர்) . இயேசு தன்னைப்பற்றி கூறும் போது தானும் இறைவனும் ஒன்றாக இருக்கிறோம் என்றுச் சொன்னார் (யோவான் 10:30). தோராவுடைய இறைவன் நான் தான் என்று இயேசு பிரகடனப்படுத்தினார் ( யோவான் 8:58). இயேசு மனித உருவில் வந்த இறைவன் என்று இன்ஜில் தெளிவாக போதிக்கின்றது (யோவன் 1:1,14). நாம் அனைவரும் பாவம் செய்துள்ளோம் என்றும் இதனால் சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது என்றும் இறைவனுக்குத் தெரியும். நாம் மன்னிக்கப்படுவதற்கு ஒரே வழி நாம் செய்த பாவ கடன் தீர்க்கப்படவேண்டும் என்றும் இறைவனுக்குத் தெரியும். அப்படிப்பட்ட முடிவில்லா (மிகப்பெரிய) விலையைச் செலுத்த தன்னால் மட்டுமே முடியும் என்றும் இறைவனுக்குத் தெரியும். இறைவன் மனித உருவில் இயேசுக்கிறிஸ்துவாக பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார் (சூரா 3:46; 6:85; 19:19), முழுமையான வசனத்தை போதித்தார், மற்றும் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை செலுத்துவதற்கு நமக்காக மரித்தார். இறைவன் இதை ஏன் செய்தாரென்றால், அவர் நம்மை நேசித்தார், மற்றும் நாம் நம்முடைய நித்தியத்தை அவரோடு சொர்க்கத்தில் கழிக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார்.

இதனால் நீங்கள் புரிந்துக் கொள்வதென்ன ? நம்முடைய பாவங்களுக்காக இயேசு முழுமையான தியாகபலியானார். நாம் அவர் கொடுக்கும் பரிசைப் பெற்றுக்கொண்டால் ( யோவான் 1:12), அவருடைய நண்பர்களாகிய நமக்காக அவருடைய உயிரையே கொடுத்த இயேசுவை இரட்சகராக நம்பினால், இறைவன் நம் எல்லாருக்கும் மன்னிப்பும் மற்றும் இரட்சிப்பும் கொடுப்பார். இயேசுவை உங்கள் இரட்சகராக அவர் மீது உங்கள் நம்பிக்கையை நீங்கள் வைத்தால், உங்களுடைய நித்திய வாழ்வை சொர்க்கத்தில் கழிக்க உங்களுக்கு முழு நிச்சயம் உண்டு. இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார், உங்கள் ஆத்துமாவை சுத்தப்படுத்துவார், உங்கள் ஆன்மாவைப் புதுப்பிப்பார், இந்த உலகில் நிறைவான வாழ்வைத் தருவார் மற்றும் அடுத்த உலகில் நித்திய வாழ்வையும் தருவார். இப்படிப்பட்ட விலை மதிக்க முடியாத பரிசை எப்படி நாம் மறுக்க முடியும்? நம்மை நேசித்து தம்மைத்தாமே நமக்காக தியாக பலியான இறைவனுக்கு எப்படி நாம் முதுகைக் காட்டமுடியும்?

நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்று நிச்சயமில்லாமல் இருப்பீர்களானால், பின்வரும் பிரார்த்தனையை இறைவனிடம் செய்ய நாங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். "இறைவா, எது உண்மையென்று அறிந்துக்கொள்ள உதவிப்புரியும், தவறானதை தெளிவாய் புரிந்துக்கொள்ள உதவிப்புரியும். இரட்சிப்பிற்கு ( மீட்பிற்கு) சரியான வழி எது என்று நான் அறிந்துக்கொள்ள உதவிப்புரியும்". இப்படிப்பட்ட பிரார்த்தனையை இறைவன் எப்போதும் கணம் செய்வார்.

நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், இறைவனிடம் சத்தமாகவோ அல்லது நிசப்தமாகவோ பேசுங்கள், மற்றும் இயேசுவின் மூலமாக இரட்சிப்பு என்ற பரிசை பெற்றுக்கொண்டதாக அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்ய விரும்பினால், இதோ இங்கு ஒரு மாதிரிப் பிரார்த்தனை கொடுக்கப்பட்டுள்ளது. "இறைவா, என் மீது உம் அன்புக்காக நன்றி, எனக்காக நீர் தியாக பலியானதால் நன்றி, எனக்கு மன்னிப்பு மற்றும் இரட்சிப்பு கொடுத்ததால் உமக்கு நன்றி, இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பு (மீட்பு) எனும் பரிசை நான் பெற்றுக்கொள்கிறேன், இயேசுவே என் இரட்சகர் என்று நான் நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன் மற்றும் என்னை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன், ஆமென்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள "நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://www.gotquestions.org/Tamil/Tamil-Muslim-Christian.html