பைபிள்:உலக அதிசயம்

மேற்பரப்பின் ஒரு குறிப்பிட புள்ளியில் துகள் கற்றையை செலுத்தும்போது தங்க அணுக்கள் குதித்து வெளிவரும். அப்போது அடியில் உள்ள சிலிகான் படுகை தெரியவரும்.
 
உயிர் அணுத் தின்மம் (Bio-molecular) மற்றும் டி.என்.ஏ (DNA) ஆகியவற்றில் ஏகப்பட்ட தரவுகளை சேமிக்க எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
உலகின் மிக மிகச் சிறிய பைபிள் இந்த பைபிளே.
 
இந்த கண்டுபிடிப்பிற்கு முன்னதாக 1.1 X 1.3 X 0.4 அங்குலத்தில் 1504 பக்கங்களில், 0.4 அவுன்ஸ்கள் எடை கொண்ட மிகச் சிறிய பைபிள் உள்ளதாக கின்னஸ் உலக சாதனை செய்தி தொடர்பாளர் அமாரிலிஸ் எஸ்பினோசா கூறுகிறார்.
 
நவம்பர் 2001ல் இந்திய பேராசிரியர் ஒருவர் இந்த பைபிளை வாங்கியுள்ளார். இந்த பைபிள் ஆஸ்ட்ரேலியாவில் உருவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
 
அந்த சிறிய பைபிளின் சாதனையை முறியடித்து இஸ்ரேல் விஞ்ஞானிகளின்  சர்க்கரையைவிடவும் சிறிதான இந்த யூத பைபிள் கின்னஸ் சாதனையில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.