இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத ஜீவியம் - Rev.Paul Dawson


தேவன் தம் பிள்ளைகளுக்கு அளிக்கிற தீர்கதரிசன வார்த்தை என்னவெனில் அற்புதங்கள் அற்புதங்கள் அற்புதங்களே!. ஆம் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் வாழ்க்கை அற்புதங்களால் நிரம்பி வழியப் போகிறது. ஆனால் நீங்கள் கண்ணுக்கு புலனாகாத தேவனுடைய இராஜ்ஜியத்தை எடுக்காதவரைக்கும் மேலும் அந்த இராஜ்ஜியத்தில் புலனாகாத வல்லமையை எடுத்துக் கொள்வது எப்படி என்பதை நீங்கள் அறிந்துகொள்கிறவரைக்கும் அவை உங்கள் வாழ்க்கையில் நடப்பதில்லை.அந்த வல்லமையை எடுத்துக் கொள்வது எப்படி?

அந்த வல்லமை இந்த இயற்கையான உலகில் தேவனுடைய இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத வாழ்க்கையை வாழ ஒருவருக்கு அவசியமானது ஆகும். ஒருவர் அந்த கண்ணுக்கு தெரியாத இராஜ்ஜியத்தை ஒருவர் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்? மேலும் அனைத்து தேவபிள்ளைகளுக்கும் கிடைக்கக் கூடிய அந்த கண்ணுக்கு தெரியாத வல்லமையை ஒருவர் எடுத்து பயன்படுத்து எவ்வாறு?

அந்த கண்ணுக்கு தெரியாத காரியங்களை எடுத்துக் கொள்வதற்குரிய இரகசியம் என்னவெனில் இயேசுவைப் போல வாழ்வது ஆம்.இந்த உலகத்தில் ஒருவர் இயேசுவைப் போல வாழ்வது சாத்தியமே. ஏனெனில் தேவனே நம்மை இயேசுவைப் போல மாற்றியிருக்கிறார். அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம் என்று 1 யோவான்4:17 கூறுகிறது. தேவன் ஏன் நம்மை இயேசுவைப் போல ஆக்கினார். நாம் ஆவரைப் போல வாழ்வதற்கே.

இயேசு கவலையற்ற, குழப்பமற்ற அற்புத அடையாளங்கள் நிறைந்த நம்பிக்கை நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். இயேசுவைப் பொறுத்தவரையில் அற்புதங்கள் என்பவை சர்வசாதாரணமானதாயிருந்தது. அவ சென்ற இடமெங்கிலும் அற்புதம் நிகழ்ந்தது. அவர் ஒரு திருமண வீட்டுக்கு சென்றாலும் கூட அங்கும் அற்புதம் நடந்தது. உண்மயைச் சொல்வதானால், அற்புதங்களையும் இயேசுவையும் பிரிக்க முடியாது.

நீங்கள் இயேசுவைப் போல வாழமுடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இயேசுவின் இயற்கைக்கப்பாற்பட்ட வாழ்க்கைக்கான இரகசியத்தை நீங்கள் அறிந்து கொண்டால், நீங்களுமற்புதங்கள் நிறைந்த இயற்கைக்கப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை வாழமுடியும்.

அதற்கான இரகசியம் என்ன?
யோவான்11.42ல் நாம் அதைக் காண்கிறோம், 'நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்.' இயேசு ஒரு காரியத்தைக் குறித்து உறுதியாயிருந்தார். அவருடைய ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் பிதா பதிலளிப்பார் என்று அறிந்திருந்தார்.இதை நாம் 1யோவான்5:15ல் உள்ள வசனம் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்,' நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.' பிதாவாகிய தேவன் நம் ஜெபங்களைக் கேட்பாரெனில், நீங்கள் அவரிடம் கேட்டதைப் பெற்றுக் கொள்வீற்கள் என்ற உறுதியுடன் இருக்கமுடியும் என்று அப்போஸ்தலனாகிய யோவான் மூலமாக வேதாகமம் தெளிவாகக் கூற்குகிறது.


இன்று நாம் நீண்ட நாட்கள் கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்தும் கூட நம்முடைய அனேக வேண்டுதல்கள்களுக்கான பதிலை நாம் பெறவில்லை. ஏன்? தேவன் நம் ஜெபங்களைக் கேட்கவில்லை என்பது அதகு காரணம் அல்ல. தேவன் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்று நாம் நினைக்கிறோம். அனால் நடைமுறையில் அவ்வாறு நாம் இருப்பதில்லை. நாம் அவ்வாறிருந்தால் அவருடைய வார்த்தையின்படி நாம் விரும்புகிற வேண்டுதல்களை பெற்றுக் கொள்வோம் அல்லவா? தேவன் ஏன் நம் ஜெபங்களைக் கேட்பதில்லை?

இதைக் குறித்து நீங்கள் அதிகமறிந்து கொள்ள விரும்பினால், இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத ஜீவியம் என்ற தலைப்பில் நாங்கள் வெளியிட்டிருக்கிற வல்லமையான செய்தியை கேளுங்கள். உங்கள் வாழ்க்கை மாற்றப்படும். தேவனுடைய பலத்தசத்துவம் உங்களை நிரப்பி பாதுகாத்துக் கொள்வதாக. இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத ஜீவியம் செய்தியைக் கேட்க பின்வரும் லின்க்கை கிளிக்செய்யவும்:
http://www.saftm.org/streamingaudio.php
 

http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=275