(02)ஆதாம் ஏவாளும் பிசாசின் வஞ்சனையும்

 


 

ஏதேன் தோட்டம்
கடவுள் உலகைப் படைத்தபின், உலகின் மையத்தில் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு 'ஏதேன்' எனப் பெயர்.

ஏவாளின் தோற்றம்
மன்னால் செய்யப்பட்ட‌ ஆதாமுக்கு தன் மூச்சுக்காற்றை ஊதி ஆதாமுக்கு உயிர் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் அவனை நிறுவினார்.அவன் தனிமை கண்டு கடவுள், இவனுக்கு ஒரு துணையை செய்வோம் என, அவனைத் தூங்கச் செய்தார். ஆதாம் தூங்கும்போது அவனது விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணைச் செய்து ஆதாமிடம் கொண்டுவந்தார். அவனும் அவளுக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டழைத்தான்.

ந‌ன்மை தீமை அறியும் க‌னி
அந்தத் தோட்டத்தின் நடுவில்தான் நன்மை தீமையை உணரச்செய்யும், கனிதரும் மரம் இருந்தது.
கடவுள் ஆதாமிடம், இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம், ஆனால் நன்மை தீமையை உணரச் செய்யும் இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது, உண்டால் நீ இறப்பது நிச்சயம்" என எச்சரித்தார்.
ஆதாம் எல்லா உலகிலுள்ள எல்லாவற்றிற்கும் பெயரிட்டான்.
இருவரும் நிர்வாணமாயிருந்தும் வெட்கமில்லாதிருந்தனர். இருவரும் ஏதேனை இன்பமாய் அனுபவித்தனர்.

பிசாசின் வஞ்சனை

பிசாசானவன் பாம்பு வடிவில் ஏவாளிடம் வந்து கேட்டது, "கடவுள் எல்லா மரக்கனிகளையும் உண்ணச்சொன்னாரா?"
ஏவாள், இல்லை நல்லது கெட்டது அறியச் செய்யும் மரக்கனி ஏதேனின் நடுவிலிருக்கிறதே அதை சாப்பிட்டால் இறப்பு வரும்" என்று சொன்னார்,என்றாள்.
பாம்பு அவளைப்பார்த்து,"அப்படியொண்றுமில்லை. அதை நீங்கள் உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், கடவுளைப் போல நல்லது தீயதை அறிந்து கொள்வீர்கள்" என ஆசைகாட்டியது.
ஏவாள் அந்த மரக்கனிகள் பார்க்க அழகாயிருப்பதைக்கண்டாள். ஒரு கனியை எட்டிப்பறித்து சுவைத்தாள், ஆதாமுக்கும் உண்ணக்கொடுத்தாள்.கனி உண்ட மறுகணம் இருவரும் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோமென்று அறிந்தவர்களாய், வெட்கம் மேலிட, இலைதளைகளாலான ஆடை ஒன்றை செய்து அணிந்து கொண்டார்கள். கடவுள் காணாதிருக்க, மரங்களின் இடையே மறைந்திருந்தார்கள்.
அப்போது கடவுள் "ஆதாம் எங்கேஇருக்கிறாய்" எனத் தேடிவந்தார்.
ஆதாம்,"நிர்வாணமாயிருப்பதால் மறந்திருக்கிறேன்" என்றான்.
"நீ நிர்வாணமாயிருக்கிறாயென யார் சொன்னது?,
விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டாயா?", கடவுள்.

"இந்தப் பெண்தான் எனக்கு அதைக் கொடுத்தாள்", ஆதாம்
.
"இதோ பாம்புதான் என்னை உண்ணச்சொன்னது",ஏவாள்.

 

 

கடவுளின் சாபம்
கடவுள் பாம்பை சபித்தார்.
ஏவாளிடம், "உனக்கு பிள்ளை பேற்றின் வலியை தீவிரமாக்குவேன், இருந்தாலும் நீ உன் கணவனையே மீண்டும் விரும்பும்படி செய்வேன்." எனக் கடிந்தார்.
பிறகு ஆதாமிடம்,"நீ உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ் என்று சபித்தார், உன்னால் இந்த பூமி சபிக்கப்பட்டதாகிறது. மண்ணிலிருந்து பிறந்த நீ மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்" என தோல்களாலான ஆடையை அணிவித்து இருவரையும் ஏதேனைவிட்டு வெளியெற்றினார். எதேனின் அனைத்து சுகங்களையும் முடிவிலா மகிழ்ச்சியை ஆதாமும் ஏவாளும் இழந்தனர்.
 
 
மூலம்: http://bibleuncle.blog.co.in/2008/07/31/2/