கிறிஸ்தவம் ஓர் மனோதத்துவம்

 

 

மனிதர்களின் இயல்பு
அன்பான சகோதரனே சகோதரியே..,

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும் மற்ற ஏதாவது ஒன்றின் மேல் அன்பு செலுத்தியே ஆக வேண்டும். இதுவே மனிதனின் பொதுவான இயல்பு.  தாய், தகப்பன், சகோதரன், சகோதரி, கனவன், மனைவி, நண்பர்கள், காதலர்கள், என எதாவது மனிதர்கள் மீதும், சிலர் கார் பைக் தொழில், என உயிரில்லாத பொருட்கள் மீதும். இன்னும் பரிதாபத்திற்குரிய சிலர் பாம்பு பல்லி ஓனான், போன்ற பூச்சிகள் மீதும் விலங்குகள் மீதும் செல்லப்பிரானிகள் என்ற பெயரில் அன்புசெலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 

மனிதர்களின் அன்பு நிலையற்றது

மனிதர்கள் மீது செலுத்தப்படும் அன்பு நிலையற்றது, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. எதாவது ஒரு சூழ்நிலையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது உறவு முறிந்து விடுகிறது. பூச்சிகள், விலங்குகள் மற்றும் உயிரில்லாத பொருட்களின் மேலுள்ள அன்பை  அவைகள் புரிந்து கொள்ள முடியாது மீறிப் புரிந்துகொண்டாலும் அவைகளால் திரும்பவும் அன்பு செலுத்த முடியாது.

அன்பான சகோதரனே சகோதரியே…..
நீங்களும் இது போன்ற சூழ்நிலையில் இருக்கலாம். உறவுகள் முறிந்து ஏமாற்றப்பட்டு… ஐயோ… இந்த உலகில் எனக்கென யாருமே இல்லையா?…. என மனதளவில் கதறிக் கொண்டிருக்கலாம். உள்ளம் உடைந்து விரக்தியில் தற்கொலை எண்ண‌த்தோடுகூட இருக்கலாம். நீங்கள் ஏதாவது கோபத்தினால்  மற்றவர்களைத் துன்பப்படுத்தியதனால் மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போயிருக்கலாம். குற்ற உணர்ச்சி உங்களை வாட்டலாம்.

அன்பான சகோதரனே சகோதரியே…..
நீங்கள் யாராகவேண்டுமானால் இருக்கலாம் எவ்வளவு கொடுமையான பாவங்களையும் செய்திருக்கலாம் அதனால் உங்களை அனைவரும் கைவிட்டிருக்கலாம்.

உங்களையும் புரிந்து கொண்டு அரவனைத்து ஆறுதல் சொல்லவும், அன்பு செலுத்தவும் ஒரு நண்பர் இருக்கிறார். உங்கள் நல்ல உள்ளத்தை மட்டும் எதிர்பார்த்து…….

உங்களை எதிர்பார்த்து கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கும் அந்த நண்பர் இவ்வுலகின் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே ஆவார்.

அவரை நண்பராகப் பெற்றால் உங்களுக்கு என்ன நன்மை?

(1) உங்கள் பாவமும் சாபமும் மன்னிக்கப்படும்

(2) நிரந்தரமான தாயும் தகப்பனும் சகோதரனுமாகிய ஒரு நண்பர் உங்களுக்குக் கிடைப்பார். (நீங்கள் அவரைவிட்டு விலகினால் ஒழிய அவர் உங்களை விட்டு விலகவே மாட்டார்.)

(3) உங்கள் எதிகாலத்தைப் பற்றிய மற்றும் தோல்விகளைப் பற்றிய பயம் உங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விடும் ஆம் அவைகளை இயேசுகிறிஸ்துவே ஏற்றுக்கொள்வார் நீங்கள் வேண்டிகொள்வ‌தற்கும் நினைப்பதற்கும் அதிகமான நன்மையான காரியங்களை உங்களுக்குச் செய்வார்.

(4) நீங்கள் உங்கள் தேவைகளை சரியான காலங்களில் பெற்றுக்கொண்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வீர்கள்……

 

இப்படிப்பட்ட நண்பரைப் பெற்றுக்கொள்ள ஆசையா? அவர் உங்கள் வாழ்வில் வந்து உங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமா?
அப்படியானால் இந்த சிகப்பு (Clik RedBox) பெட்டியை  சொடுக்குங்கள்……………………….……………………………….>

 

ஒரு வேளை இப்படிப்பட்ட ஒரு அருமையான நண்பரைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லையா? அப்படியானால் நீங்கள் நீல நிற (Clik BlueBox) பெட்டியை சொடுக்குங்கள்…………………………………………………………………………..>