”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு


வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நம் கண்முன்னே நிறைவேறிக்கொண்டு வருவது நாம் எல்லாரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமரே வேதாகமத்தின் வசனத்தை மேற்க்கோள்காட்டி இவ்வசனங்கள் நிறைவேறியிருக்கின்றன எனக் கூறுவது சற்று அரிதான விசயமே. சமீபத்தில் போலந்து நாட்டில் ஆஸ்விச் எனும் இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 65-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வேதாகமத்தில் எசேக்கியேலின் உலர்ந்த எலும்புகள் தரிசனத்தை மேற்க்கோள்காட்டி அது நம் காலங்களில் நிறைவேறி விட்டதாக அறிவித்தார்.

அவர் பேசும் போது "யூதர்கள் படுகொலைக்கு பின், நாம் சாம்பலிலிருந்தும் அழிவிலிருந்தும் எழுந்து, என்றைக்கும் தீர்க்கமுடியாத வலியிலிருந்து மீண்டுவந்தோம். யூத இன பாசத்தாலும், மனித நேய உணர்வுகளாலும், தீர்க்கதரிசிகளின் தரிசனங்களாலும் உந்தப்பட்ட நாம் புதிதாக துளிர்விட்டோம். ஆழமாய் வேரூண்றத்தொடங்கினோம். உலர்ந்த எலும்புகள் மாமிசத்தால் மூடப்பட்டது. அதிலே ஆவி புகுந்தது. உயிர்பெற்று நாம் சொந்த காலிலே நின்றோம். எசேக்கியல் தீர்க்கதரிசனம் உரைத்தபடி "மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன்." நான் இப்போது நின்று கொண்டிருப்பது இப்படி பல்லாயிரம் யூதர்கள் மாண்ட இடம்.நான்
மட்டுமல்ல என்னோடு கூட சேர்ந்து இஸ்ரேல் தேசமும் எல்லா யூதர்களும் நிற்கிறார்கள். உங்கள் நினைவுகளில் நாங்கள் தலைவணங்குகிறோம். எல்லோரும் பார்க்க. எல்லோரும் கேட்க. எல்லோரும் அறிய, நீலமும் வெண்மையும், நடுவே தாவீதின் நட்சத்திரமும் கொண்ட
கொடியேற்றி நாங்கள் இப்போது நிமிர்ந்து நிற்கிறோம். நம் நம்பிக்கை வீண்போகவில்லை." என இஸ்ரேல் நாட்டின் உதயத்தை உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்ற எசேக்கியேலின் தரிசனத்தோடு ஒப்பிட்டு பேசினார்.

எசேக்கியேலின் 37-ம் அதிகாரம் நம் காலத்தில் நிறைவேறினதென்றால் 38ம்,39ம் நம் காலத்திலேயே நிறைவேறலாம் என்பது அதிக நிச்சயமல்லவா?
http://www.pmo.gov.il/PMOEng/Communication/PMSpeaks/speechauchwitz270110.htm